வற் வரி; 15 இல் இருந்து 08 வீதமாக குறைவு: மஹிந்த அறிவித்தார்

🕔 November 27, 2019

‘வற்’ வரியை (பெறுமதி சேர்க்கப்பட்ட சேவைகள் வரி) 15 வீதத்திலிருந்து 08 வீதமாக குறைத்துள்ளதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அறிவித்துள்ளார்.

ஜனாதிபதி தலைமையில் இன்று புதன்கிழமை கூடிய அமைச்சரவை கூட்டத்தின்போதே, இந்த முடிவு எடுக்கப்பட்டதாக மஹிந்த ராஜபக்ஷ அறிவித்துள்ளார்.

மேலும் தேச கட்டிட வரி உட்பட பல வரிகளை நீக்கவும் அமைச்சரவை முடிவு செய்துள்ளது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் குறிப்பிட்டதைப்போல, டிசம்பர் முதலாம் திகதி தொடக்கம் வற் வரியை குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை இன்றைய கூட்டத்தின்போது புதிய வரிகளைச் சீர்திருத்தவும், அத்தியாவசியப் பொருட்களின் விலையைக் குறைக்கவும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அறிவுறுத்தியிருந்தார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்