ரணில் எதிர்க்கட்சித் தலைவர்; கரு தெரிவிப்பு
நாடாளுமன்ற எதிர்க்கட்சி தலைவராக ஐக்கிய தேசிய முன்னிணியின் தலைவர் முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை ஏற்றுக் கொண்டுள்ளதாக சபாநாயகர் கரு ஜயசூரிய குறிப்பிட்டுள்ளார்.
தனது ட்விட்டர் பக்கத்தில் இந்த தவலை சபாநாயகர் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற சம்பிரதாயத்துக்கு இணங்க, ரணில் விக்ரமசிங்கவை எதிர்க்கட்சித் தலைவராக ஏற்றுக் கொண்டுள்ளதகாவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
எவ்வாறாயினும், சஜித் பிரேமதாஸவை எதிர்க்கட்சித் தலைவராக நியமிக்குமாறு கோரி, ஐக்கிய தேசியக் கட்சி நாடளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அந்தக் கட்சியின் பங்காளிக் கட்சிகளின் தலைவர்கள் கையொப்பமிட்டு சபாநாயகருக்கு கடிதமொன்றை அனுப்பி வைத்திருந்தமை நினைவுகொள்ளத்தக்கது.