தடுத்து வைக்கப்பட்டுள்ள பளை வைத்தியர் வழங்கிய தகவலுக்கு அமைய, மேலும் ஆயுதங்கள் சிக்கின

🕔 August 28, 2019

கைது செய்து தடுத்து வைக்கப்பட்டுள்ள யாழ்ப்பாணம் – பளை வைத்திய சாலையின் சட்ட வைத்திய அதிகாரி வழங்கிய தகவலுக்கு அமைய மேலும் வெடிபொருட்கள், துப்பாக்கிகள் உள்ளிட்ட ஆயுதங்கள் நேற்று செவ்வாய்கிழமை கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

பயங்கரவாதத்துடன் தொடர்புடையவர் எனும் சந்தேகத்தின் பேரில் பளை வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரி டொக்டர் சின்னையா சிவரூபன் என்பவர் கடந்த 18ஆம் திகதி ராணுவத்தால் கைது செய்யப்பட்டு யாழ்ப்பாணத்திலுள்ள பயங்கரவாத விசாரணைப் பிரிவிடம் கையளிக்கப்பட்டார்.

அதனையடுத்து, கைது செய்யப்பட்ட வைத்தியர் விசாரிக்கப்பட்டு வந்தார்.

இந்த நிலையில், அவர் வழங்கிய தகவலுக்கு அமைய ஏ.கே.47 ரக துப்பாக்கியொன்று, 10 கிலோ வெடிமருந்து, 02 ரவைக்கூடுகள், 11 கைக்குண்டுகள், 120 ரவைகள், ஒரு தொலைபேசி மற்றும் மேலும் பல உபகரணங்கள் திங்கட்கிழமையன்று கைப்பற்றப்பட்டன.

இதனையடுத்து, அவர் பின்னர் வழங்கிய தகவலுக்கு அமைவாக தற்போது மேலும் பல வெடிபொருட்களும் ஆயுதங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.

இதேவேளை, பொலிஸ் உதவி அத்தியட்சகர் ஒருவரின் தலைமையில், பயங்கரவாத விசாரணைப் பிரிவின் குழுவொன்று, இவ்விடயம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை நடத்துவதற்காக நியமிக்கப்பட்டுள்ளது என, பொலிஸ் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

முன்னர் கைப்பற்றப்பட்ட ஆயுதங்கள்

Comments

புதிது பேஸ்புக் பக்கம்