அஜித், சுஜீவ கட்சியின் சட்ட திட்டங்களை மீறவில்லை: ஐ.தே.க. தவிசாளர் கபீர் ஹாசிம்
சுஜீவ சேனசிங்க மற்றும் அஜித் பி. பெரேரா ஆகியோர் கட்சியின் சட்டத் திட்டங்களை மீறி செயற்படவில்லை என, ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளர் கபீர் ஹாசிம் தெரிவித்துள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் அமைச்சரவை அந்தஸ்தற்ற அமைச்சர்கள் மேற்படி இருவருக்கும் எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை மேற்கொள்ள ஐக்கிய தேசியக் கட்சி மேற்கொண்ட தீர்மானம் தொடர்பில் நடத்தப்பட்ட ஊடகவியலாளர் சந்திப்பின் போது அவர் இதனைக் கூறினார்.
எனினும், கட்சியின் உறுப்பினர்கள் மீது முன்வைக்கப்படும் முறைப்பாடுகள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்வது சாதாரண நடைமுறை என்றும் அவர் இதன்போது மேலும் தெரிவித்தார்.
தொடர்பான செய்தி: சஜீத் ஆதரவு அமைச்சர்கள் இருவருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை: ஐ.தே.கட்சி தீர்மானம்