காஷ்மீர் பயங்கரவாதிகளின் தாய் வீடாகி விட்டது – நடிகர் ரஜினிகாந்த்

🕔 August 14, 2019

காஷ்மீர் பிராந்தியமானது பயங்கரவாதிகள், தீவிரவாதிகளின் தாய்வீடாக இருப்பதாகவும், அவர்கள் இந்தியாவுக்குள் ஊடுருவ நுழைவாயில்போல இருப்பதாகவும் நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்திருக்கிறார்.

அரசியல்வாதிகள் இதனை அரசியலாக்கக்கூடாது என்றும் அவர் கூறியுள்ளார்.

சென்னை போயஸ் கார்டனில் அவரது வீட்டுக்கு வெளியில் செய்தியாளர்களை சந்தித்த ரஜினிகாந்த், தமிழ் திரைப்படங்களுக்கு விருதுகள் கிடைக்காதது ஏமாற்றமளிப்பதாகக் கூறினார்.

மேலும். சென்னையில் புத்தக வெளியீட்டு விழா ஒன்றில் பேசிய ரஜினிகாந்த், பிரதமர் மோடியும் உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் கிருஷ்ணர் – அர்ஜுனர் எனக் குறிப்பிட்டது விவாதமாகியிருப்பது குறித்து செய்தியாளர்கள் கேட்டபோது; “காஷ்மீர் விவகாரத்தை அவர்கள் ராஜதந்திரத்தோடு கையாண்டிருக்கிறார்கள். கிருஷ்ணர் – அர்ஜுனர் என்று ஏன் சொன்னேன் என்றால், ஒருத்தர் திட்டத்தைக் கொடுப்பவர், மற்றொருவர் அதை செயல்படுத்துபவர்” என்று பதிலளித்தார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்