இரண்டு மாதங்களின் பின்னர் டொக்டர் ஷாபிக்கு பிணை: ஒவ்வொரு ஞாயிறும் குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் ஆஜராகவும் உத்தரவு

🕔 July 25, 2019

மூன்று குற்றச்சாட்டுகளின் பேரில் தடுத்து வைக்கப்பட்டிருந்த, குருணாகல் வைத்தியசாலையில் கடமையாற்றி வந்த டொக்டர் எஸ். ஷாபி, இன்று பிணையில் விடுவிக்கப்பட்டார்.

குருணாகல் நீதவான் நீதிமன்ற நீதவான் சம்பத் ஹேவாவசம், பிணை உத்தரவை வழங்கினார்.

இரண்டரை லட்சம் ரொக்கப் பணம், 25 லட்சம் ரூபா பெறுமதியுடைய 04 சரீரப் பிணைகளில் டொக்டர் ஷாபியை விடுவிப்பதற்கு நீதவான் உத்தரவிட்டிருந்தார்.

இதேவேளை, குற்றப் புலனாய்வு திணைக்களத்துக்கு ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் டொக்டர் ஷாபி ஆஜராக வேண்டுமெனவும் இதன்போது நீதவான் பணித்திருந்தார்.

கடந்த மே மாதம் 25ஆம் திகதி டொக்டர் ஷாபி கைது செய்யப்பட்டிருந்தார்.

Comments