இலங்கைக்கு வந்து சென்ற, பெயரில்லா மர்ம விமானம்; தகவல் வெளியிட்டார் திலங்க எம்.பி்

🕔 July 25, 2019

லங்கைக்கு வந்து சென்ற மர்ம விமானம் ஒன்று குறித்து, ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் திலங்க சுமத்திபால தகவல் வெளியிட்டுள்ளார்.

கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்துக்கு இந்த மர்ம விமானம் வந்து சென்றுள்ளது.

முழுமையாக வெள்ளை நிறத்தில் காணப்பட்ட அந்த விமானத்தில், எந்த நாட்டுக்குரியது என்கிற பெயர் அடையாளங்கள் காணப்படவில்லை.

விமானம் எந்த நாட்டுக்கு சொந்தமானது? எந்த விமான சேவைக்கு உரியது? என்ன காரணத்துக்கா இலங்கை வந்தது? அந்த விமானத்தில் வந்தவர்கள் யார்? அவர்கள் இந்த நாட்டில் என்ன செய்தார்கள்? என்பது தொடர்பான தகவல்கள் மர்மமாகவே உள்ளதாகக் கூறப்படுகிறது.

அந்த விமானத்தில் N513SN என மாத்திரமே குறிப்பிடப்பட்டிருந்ததாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் திலங்க சுமத்திபால கூறியுள்ளார்.

எவ்வாறாயினும் அது அமெரிக்காவின் விமானமாக இருக்கலாம் எனவும், அமெரிக்காவின் காலணித்துவ நாடாக இலங்கையை மாற்றும் முயற்சியின் ஒரு பகுதியாகவே இந்த விமானம் வந்து சென்றுள்ளது எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் மேலும் தெரிவித்துள்ளார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்