நபர் ஒருவர் குறித்து மட்டுமே றிசாட் வினவினார்; அழுத்தம் கொடுக்கவில்லை: தெரிவுக்குழு முன், ராணுவத் தளபதி

🕔 June 26, 2019

ஸ்டர் தின தாக்குதலையடுத்து கைது​செய்யப்பட்டுள்ளவர்களை விடுவிக்குமாறு, முன்னாள் அமைச்சர் றிசாட் பதியுதீன் தனக்கு எவ்வித அழுத்தங்களையும் விடுக்கவில்லை என்று ராணுவத் தளபதி மஹேஷ் சேனநாயக்க தெரிவித்துள்ளார்.

ஈஸ்டர் தின தாக்குதல் தொடர்பில் விசாரணை செய்யும் நாடாளுமன்ற தெரிவுக்குழு முன்னிலையில், இன்று புதன்கிழமை அவர் சாட்சியமளிக்கும் போதெ, இதனைக் கூறினார்.

ஏப்ரல் மாதம் 26ஆம் திகதி இஷான் அஹமட் என்ற நபர் தெஹிவளையில் வைத்து கைதுசெய்யப்பட்டதன் பின்னர், நாடாளுமன்ற உறுப்பினர் றிசாட் பதியூதீன் தொலைபேசி ஊடாக 03 தடவை தன்னை அழைத்து, இஷான் அஹமட் என்ற நபர் கைதுசெய்யப்பட்டுள்ளரா என்று மாத்திரமே தன்னிடம் வினவியதாகவும் ராணுவத் தளபதி இதன்போது மேலும் தெரிவித்துள்ளார்.

Comments