கிழக்கு மாகாண முன்பள்ளி ஆசிரியர்களுக்கு, அதிகரிக்கப்பட்ட கொடுப்பனவு வழங்கல்

🕔 June 2, 2019

– ஹஸ்பர் ஏ ஹலீம் –

கிழக்கு மாகாண முன்பள்ளி பணியகத்தினால் திருகோணமலை, மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்டங்களைச் சேர்ந்த முன்பள்ளி ஆசிரியைகளுக்கான அதிகரிக்கப்பட்ட 1000 ரூபா  கொடுப்பனவு மற்றும் அடையாள அட்டை வழங்கும் நிகழ்வு இன்று ஞாயிற்றுக்கிழமை திருகோணமலை உவர்மலை  விவேகானந்தா கல்லூரியில் இடம் பெற்றது.

முன்பள்ளி ஆசியைகளுக்கான மாதாந்த கொடுப்பனவு 3000 ரூபாவாக இருந்த நிலையில், மேலும் 1000 ரூபா அதிகரித்து 4000 ரூபா வழங்கப்படவுள்ளது.

கிழக்கு மாகாணத்தை சேர்ந்த 1711 முன்பள்ளியில் கற்பிக்கும் 3592 ஆசிரியைகளுக்கே இவ்வாறு அதிகரிக்கப்பட்ட கொடுப்பனவு தொகை வழங்கி வைக்கப்பட்டன.

இவ் நிகழ்வில் துறைமுகங்கள் மற்றும் கப்பல்துறை பிரதியமைச்சர் அப்துல்லா மஃறூப், ஆளுநரின் செயலாளர் அசங்க அபேவர்தன, மாகாண பிரதம செயலாளர் சரத் அபயகுணவர்தன, கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் ஐ.கே.ஜீ. முதுபண்டா, முன்பள்ளி பணியகத்தின் தவிசாளர் எம்.எஸ். உதுமான்லெப்பை உள்ளிட்ட பல முக்கியஸ்தர்கள் கலந்து கொண்டார்கள்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்