விரதத்தை முடித்தார் வியாழேந்திரன்

🕔 June 2, 2019

நாடாளுமன்ற உறுப்பினர் எஸ். வியாழேந்திரன் தனது உண்ணா விரதப் போராட்டத்தை கடந்த இரவு முடித்துக் கொண்டார்.

அமைச்சர் ரிஷாட் பதியுதீன், ஆளுநர்கள் ஹிஸ்புல்லா மற்றும் ஆசாத் சாலி ஆகியோர் உடனடியாக பதவி விலக வேண்டும் என்பதை வலியுறுத்தி அவர் உண்ணா விரதப் போராட்டத்தை சனிக்கிழமை காலை மட்டக்களப்பில் ஆரம்பித்தார்.

எவ்வாறாயினும் அவர் தனது உண்ணா விரதத்தை நிறைவு செய்த போதிலும், தமிழ் உணர்வாளர்கள் அமைப்பைச் சேர்ந்தவர்கள் எனக் கூறப்படுவோர் குறித்த உண்ணாவிரத போராட்டத்தை சுழற்றி முறையில் முன்னெடுத்து வருவதாக தெரியவருகிறது.

உண்ணவிரதத்தை முடித்துக்கொண்டு கருத்துத்தெரிவித்த வியாழேந்திரன்;  “கிழக்கு மாகாண ஆளுநர், மேல்மாகாண ஆளுநர், அமைச்சர் ரிசாட் ஆகியோரை பதிவி நீக்கும் வரையில் சுழற்சி முறையில் இந்த உண்ணா விரதப் போராட்டம் தொடர்ந்து முன்னெடுக்கப்படும்” எனக் கூறியுள்ளார்.

எவ்வாறாயினும், தான் அடையாள உண்ணா விரதத்தை ஆரம்பிப்பதாகவே, நாடாளுமன்ற உறுப்பினர் தொடக்கத்தில் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

தொடர்பான செய்தி: ரத்ன தேரரின் கோரிக்கையை முன்னிறுத்தி, நாடளுமன்ற உறுப்பினர் வியாழேந்திரனும் உண்ணா விரதம்

Comments

புதிது பேஸ்புக் பக்கம்