துண்டிக்கப்பட்ட உடல் பாகங்களை பொருத்துவதற்கு முன்னரான முதலுதவி: தெரிந்திருக்க வேண்டியவை

🕔 April 12, 2019

– டொக்டர் பிரணவன் (எம்.பி.பி.எஸ்) –

பிவிருத்தி அடைந்த நாடுகளுக்கு நிகராக, மருத்துவத்துறை இலங்கையில் முழுமையடையாத போதிலும், முற்றாக  துண்டாக்கப்பட்ட அவயவங்களை சத்திர சிகிச்சை மூலம் மீளப்பொருத்தகூடியளவில் போதனா வைத்தியசாலைகள் திறன்பெற்றுள்ளன. இவை, சற்று சிக்கலான சத்திர சிகிச்சையாக இருந்தபோதிலும், இதன் பெறுபேறு,  பாதிக்கப்பட்டவரையும், துண்டிக்கப்பட்ட அவயங்களையும் வைத்தியசாலைக்கு கொண்டு வருவதற்கு முன்பாக,  செய்யப்பட வேண்டிய  நடவடிக்கைகளிலேயே தங்கியுள்ளன.

நீங்கள் செய்ய வேண்டியது

1. துண்டிக்கப்பட்ட பாகத்தை பத்திரமாக சுத்தமான பொலித்தீன் பையினுள் வைத்து, அதனை பனிகட்டிகள் நிரம்பிய பெட்டியில் வைத்து துரிதமாக  வைத்தியசாலைக்கு எடுத்துவர வேண்டும். (தாழ் வெப்பநிலை,கலங்கள் இறப்பதைத் தாமதப்படுத்தும்)

2. மேலதிகமாக அவயவங்களில் என்புமுறிவு இருக்கலாம் என ஊகிக்கும் பட்சத்தில், அந்த பகுதியை அசையாது (immobilization) மர தகட்டினை /பலகையை வைத்து  இஸ்திரபடுத்த முடியும்.

3. விபத்துக்குள்ளான  நபருக்கு உணவு மற்றும் நீரினை கொடுப்பதை தவிர்ப்பது, நேர விரயமின்றி உடனடியாக பொது மயக்கமருந்து கொடுத்து, சத்திரசிகிச்சைக்கு எடுத்து செல்ல வழிவகுக்கும்.

இப்பதிவு, மக்களின் பொது மருத்துவ மற்றும் முதலுதவி அறிவினை மேம்படுத்துவது, வைத்தியர்களின் வினைத்திறனையும், சிறந்த பெறுபேறுகளையும் அடைய வழிவகுக்கும் என்ற நன்னோக்குடன் பதியப்பட்டது.

(படங்கள் காலி போதனா வைத்தியசாலையில்  இடம்பெற்ற சத்திர சிகிச்சையில் இருந்து பெறப்பட்டது)

Comments