மஹிந்தவின் இரு நாள் செலவு 02 கோடி ரூபாய்; ஒப்பனைக் கலைஞர்களுக்கு மட்டும் 43 லட்சம் ரூபாய்

🕔 September 27, 2015
Mahinda + Sajin vaas
மு
ன்னாள் ஜனாதிபதி மஹந்த ராஜபக்ச, அமெரிக்காவில் தங்கியிருந்த காலப் பகுதியொன்றின்றின்போது, இரண்டு நாட்களுக்கு மாத்திரம் 02 கோடி ரூபாவுக்கும் மேல் செலவிடப்பட்டுள்ளதாக அறிய முடிகிறது.

ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபைக் கூட்டத்துக்காக, கடந்த 2014 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் சென்றிருந்தபோதே, மஹிந்த இவ்வாறு செலவு செய்துள்ளார்.

டொலர்களில் செலவிடப்பட்ட இந்த பணம் எவ்வாறு செலவு செய்யப்பட்டது என்பதற்கான சாட்சியம் தற்போது கிடைக்கப் பெற்றுள்ளன.

மஹிந்த ராஜபக்சவிற்கு நெருக்கமானவரும், அவரது இணைப்புச் செயலாளராகவும் வெளிவிவகார அமைச்சின் கண்காணிப்பு நாடாளுமன்ற உறுப்பினராகவும் பணியாற்றிய சஜின்வாஸ் குணவர்தன, மஹிந்த ராஜபக்சவுக்கு அமெரிக்காவில் செலவாகும் பணத்தை வழங்குமாறு கோரி, ஜனாதிபதி செயலகத்திற்கு அனுப்பியிருந்த கடிதம் ஊடகங்களுக்கு கிடைத்துள்ளது.

கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களுக்கு அமைய மஹிந்த ராஜபக்ச, அமெரிக்காவில் ஒப்பனை செய்து கொள்வதற்காக – ஒப்பனை கலைஞர்களுக்கு மாத்திரம் 43 லட்சம் ரூபாவுக்கும் மேல் செலவிட்டுள்ளார்.

‘கௌரவ ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச அவர்கள் கலந்து கொள்ளும் அமெரிக்க விஜயம் சம்பந்தமானது’ என்ற தலைப்பில் சஜின்வாஸ் எழுதிய கடிதத்தின் விபரம் வருமாறு;

ஜனாதிபதியின் செயலாளர்
ஜனாதிபதி செயலகம்
கொழும்பு 01
2014 ஆகஸ்ட் 20

இம்மாதம் 29 ஆம் திகதி ஆரம்பமாகும் கௌரவ ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் அமெரிக்க விஜயத்தின் போது, அவரது தனிப்பட்ட பணியாளர்களுக்கு வழங்கப்படும் கட்டணங்கள் மற்றும் கொடுப்பனவுகள் தொடர்பாக கீழ்காணும் விடயங்கள் குறித்து கவனம் செலுத்துமாறு கோருகிறேன்.

கௌரவ ஜனாதிபதியின் பிரதான மருத்துவருக்கு – 20 ஆயிரம் டொலர்கள்.

உதவி மருத்துவர்கள் குழுவிற்கு – 50 ஆயிரம் டொலர்கள்.

உணவு மற்றும் பானங்களை வழங்கும் பிரதான சமையல்காரருக்கு – 15 ஆயிரம் டொலர்கள்.

உதவி சமையல்கார்களுக்காக – 30 ஆயிரம் அமெரிக்க டொலர்கள்.

கௌரவ ஜனாதிபதியின் பிரதான ஒப்பனை கலைஞர் மற்றும் அவரது உதவியாளர்களுக்கு – 30 ஆயிரம் டொலர்கள்.

மேலே குறிப்பிடப்பட்டுள்ள விடயங்கள் சம்பந்தமாக நீங்கள் கவனம் செலுத்தி கூடிய விரைவில் நடவடிக்கை எடுக்குமாறு கோருகிறேன்.

நன்றி

சஜின்வாஸ் குணவர்தன (பா.உ)
ஜனாதிபதியின் இணைப்புச் செயலாளர்Sajin vaas letter - 021

Comments

புதிது பேஸ்புக் பக்கம்