சம்பள பேச்சுவார்த்தையை ஆரம்பிக்கக் கோரி, கவன ஈர்ப்பு போராட்டம்

🕔 September 27, 2015

Salary issue - 03
– க. கிஷாந்தன் –

தோ
ட்ட தொழிலாளர்களின் சம்பள பேச்சுவார்த்தையை உடனடியாக ஆரம்பிக்ககோரி, ஹட்டன் பஸ் நிலையத்திற்கு முன்பாக கவனயீர்ப்பு போராட்டமொன்று, இன்று ஞாயிற்றுக்கிழமை காலை நடைபெற்றது.

நுவரெலியா மாவட்ட தோட்ட கிராமிய தலைவர்கள் ஒன்றியமும் கரிட்டாஸ் கண்டி செட்டிக் நிறுவனமும் இணைந்து, இந்த கவன ஈர்ப்பு நடவடிக்கையினை முன்னெடுத்தனர்.

இதன்போது, 05 ஆயித்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்களின் கையொப்பத்துடன் மேற்படி கோரிக்கையினை ஜனாதிபதி, பிரதமர், தொழில்  அமைச்சர் மற்றும் சம்மந்தப்பட்ட தொழிற்சங்கவாதிகளுக்கு  அனுப்புவதற்காக,  நடவடிக்கை எடுக்கப்பட்டதாக, நுவரெலியா மாவட்ட தோட்ட கிராமியத்தின் தலைவர் டி. விஜேயந்திரன் தெரிவித்தார்.

இந்த கவனஈர்பில் கலந்து கொண்டவர்கள், சம்பள பேச்சுவார்த்தையை உடனடியாக ஆரம்பிக்க வேண்டும் என்பதை வலியுத்தும் வகையிலான பாதாதைகளை ஏந்தியிருந்தனர்.Salary issue - 02 Salary issue - 01

Comments

புதிது பேஸ்புக் பக்கம்