இறக்காமம் எல்லையில் நடப்பட்ட, அக்கரைப்பற்று பிரதேச சபையின் பெயர்ப் பலகை தடாலடியாக அகற்றல்

🕔 December 15, 2018

– முன்ஸிப் அஹமட் –

றக்காமம் பிரதேச சபை எல்லையினுள்
அக்கரைப்பற்று தவிசாளரால் அத்துமீறி நடப்பட்டதாகக் கூறப்படும் எல்லைப் பலகை, இறக்காமம் பிரதேச சபைத்தவிசாளர் தலைமையில் இன்று சனிக்கிழமை மாலை தடாலடியாக அகற்றப்பட்டது.

இறக்காமம் பிரதேச சபையில் இன்று சனிக்கிழமை அவசர தீர்மானம் நிறைவேற்றப்பட்டதன் அடிப்படையில், மேற்படி
எல்லைப் பலகை அகற்றும் நடவடிக்கை இடம் பெற்றது.

இதன்போது இறக்காமம் பிரதேச சபைத் தவிசாளருடன் உப தவிசாளர், உறுப்பினர்கள் மற்றும் ஐக்கிய சமாதான கூட்டமைப்பின் இறக்காமம் பிரதேச அமைப்பாளர் கே.எல். சமீம் உள்ளிட்டோரும்  சமூகளித்திருந்தனர்.

இறக்காமம் பிரதேச சபை எல்லைக்குள், அக்கரைப்பற்று பிரதேச சபையின் எல்லைப் பலகை நேற்று வெள்ளிக்கிழமை சட்டவிரோதமான முறையில் நடப்பட்டிருப்பதாகக் தெரிவித்து, ஐக்கிய சமாதான கூட்டமைப்பின் இறக்காமம் பிரதேச அமைப்பாளர் கே.எல். சமீம், பேஸ்புக் பக்கத்தில் பதிவொன்றினை இட்டிருந்தார்.

இதனையடுத்தே, அந்தப் பெயர்ப் பலகையினை அகற்றும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்