உங்கள் கட்சி எம்.பி.களை, முதலில் நீங்கள் பாதுகாத்துக் கொள்ளுங்கள்: ரணிலிடம் மனோ தெரிவிப்பு

🕔 October 30, 2018

க்கிய தேசியக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களை, கட்சி மாறாமல் முதலில் நீங்கள் பாதுகாத்துக் கொள்ளுங்கள் என்று,  ஐ.தே.கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்கவிடம், தான் கூறியதாக தமிழ் முற்போக்கு முன்னணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

ஐக்கிய தேசிய முன்னணியிலுள்ள சிறுபான்மை கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்களை நாங்கள்  பாதுகாத்துக் கொள்கிறோம் என்றும் ரணிலிடம் அவர் கூறியுள்ளார்.

தன்னுடைய பேஸ்புக் பக்கத்திலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

‘விஜேதாச ராஜபக்ச, சுரேஷ் வடிவேலு, ஆனந்த அளுத்கமகே, துனேஷ் கன்கந்த, வசந்த சேனநாயக்க ஆகியோர் யு.என்.பி. எம்பிகள். ஆகவே முதலில் நீங்கள் யூ.என்.பி.காரர்களை பாதுகாத்து கொள்ளுங்கள். எமது, ஐக்கிய தேசிய முன்னணி சிறுபான்மை கட்சிகளை நாம் பார்த்து கொள்கிறோம்’, என, அவர் ரணிலிடம் கூறியுள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சியைச் சேர்ந்த 05 நாடாளுமன்ற உறுப்பினர் இதுவரை, மஹிந்த தரப்புக்கு மாறியுள்ளதோடு, அமைச்சர், ராஜாங்க அமைச்சர் மற்றும் பிரதியமைச்சர் பதவிகளையும் அவர்கள் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்