ராஜிநாமாவை வாபஸ் பெற்றார் உதுமாலெப்பை; முறிந்த உறவு ஒட்டியது

🕔 September 26, 2018

– ஏ.எல். ஆஸாத் –

தேசிய காங்கிரஸில் தான் ராஜிநாமா செய்த பிரதிதித் தலைவர் பதவி மற்றும் உயர்பீட உறுப்பினர் பொறுப்பு ஆகியவற்றினை மீளவும் பொறுப்பேற்பதற்கு கிழக்கு மாகாண முன்னாள் அமைச்சர் எம்.எஸ். உதுமாலெப்பை தீர்மானித்துள்ளார்.

தேசிய காங்கிரஸின் பிரதி தலைவரும் முன்னாள் அமைச்சருமான உதுமாலெப்பை, தேசிய காங்கிரசின் அட்டாளைச்சேனை மத்திய குழுவின் முக்கிய உறுப்பினர்கள்ஆ ஆகியோர்,  நேற்று செவ்வாய்கிழமை கட்சியின் தலைவர் ஏ.எல்.எம். அதாஉல்லாவை, அக்கரைப்பற்றிலுள்ள கிழக்கு வாசலில் சந்தித்ப் பேசிய போதே, மேற்படி தீர்மானத்துக்கு உதுமாலெப்பை வந்ததாக தெரியவருகிறது

இந்த கலந்துரையாடலில் தேசிய காங்கிரசின் தேசிய அமைப்பாளர் டொக்டர் வை.எஸ்.எம். சியாவும் கலந்து கொண்டார்.

கட்சிக்குள் இருந்து கொண்டு கருத்து வேறுபாடுகள், பிளவுகளை ஏற்படுத்துபவர்கள் தொடர்பாகவும், கட்சிக்கு வெளியில் இருந்து கட்சியை பிரிக்க முயற்சிக்கும் சக்திகள் தொடர்பாகவும் இதன்போது – நீண்ட நேரம் கலந்தாலோசிக்கப்பட்டது.

இதேவேளை, கட்சிக்குள் பிளவுகளை ஏற்படுத்துபவர்கள் தொடர்பான உண்மையினை கண்டறியும் பொருட்டு, விசாரணைக்குழு நியமிக்கப்பட்டு, அக்குழுவின் அறிக்கையின் பின்னர் – உரிய நடவடிக்கை மேற்கொள்வதற்கும் இதன்போது தீர்மானிக்கப்பட்டது.

அத்துடன் உதுமாலெப்பைக்கு ஏற்படுத்தப்பட்ட மனத்தாக்கங்கள் தொடர்பிலும் இதன்போது தெளிவு காணப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இதனைத்தொடர்ந்து, உதுமாலெப்பையின் ராஜினாமா கடிதத்தை ஏற்கனவே தலைமைத்துவமும், கட்சியும் ஏற்றுக்கொள்ளாத நிலையில், குறித்த ராஜநாமாவை மீளப்பெறுமாறு தலைமைத்துவமும், சபையோர்களும் கேட்டுக்கொண்டதற்கிணங்க கட்சியின் நலனுக்காகவும், தொண்டர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்தும், தனது ராஜிநாமாவை உதுமாலெப்பை மீளப்பெற்றுக் கொண்டார் எனக் கூறப்படுகிறது.

அதற்கிணங்க, தொடர்ந்தும் – தான் வகித்த பதவிகளை பொறுப்பேற்பதற்கு உதுமாலெப்பை இணங்கியுள்ளார்.

தொடர்பான செய்தி: தேசிய காங்கிரசின் பொறுப்புகளிலிருந்து உதுமாலெப்பை ராஜிநாமா; அதாஉல்லாவுடன் முறிந்தது உறவு

Comments

புதிது பேஸ்புக் பக்கம்