தேசிய காங்கிரசின் பொறுப்புகளிலிருந்து உதுமாலெப்பை ராஜிநாமா; அதாஉல்லாவுடன் முறிந்தது உறவு

🕔 September 20, 2018

– மப்றூக் –

கிழக்கு மாகாண முன்னாள் அமைச்சர் எம்.எஸ். உதுமாலெப்பை தேசிய காங்கிரசில் வகித்து வந்த அனைத்துப் பொறுப்புகளிலிருந்தும் ராஜிநாமா செய்துள்ளார்.

மேற்படி ராஜிநாமா கடிதத்தினை கட்சியின் தலைவர் ஏ.எல்.எம். அதாஉல்லாவுக்கு, எம்.எஸ். உதுமாலெப்பை இன்று வியாழக்கிழமை பதிவுத் தபால் மூலம் அனுப்பி வைத்துள்ளார்.

தேசிய காங்கிரசின் பிரதித் தலைவர் உள்ளிட்ட அனைத்துப் பொறுப்புகளிலிருந்தும் விலகிக் கொள்வதாக உதுமாலெப்பை எழுதியுள்ள மேற்படி கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

தனது தனிப்பட்ட காரணங்களின் நிமித்தம், தேசிய காங்கிரசில் வகிக்கும் பதவிகள் பொறுப்புகள் அனைத்திலிருந்தும் விலகிக் கொள்வதாக, தனது ராஜிநாமா கடிதத்தில் உதுமாலெப்பை குறிப்பிட்டுள்ளதாக அறிய முடிகிறது.

தேசிய காங்கிரஸின் ஸ்தாபகர்களில் ஒருவரான எம்.எஸ். உதுமாலெப்பை, அந்தக் கட்சியியை வளர்த்தெடுத்தவர்களில் பிரதானமான ஒருவராவார்.

சுமார் 13 வருடங்கள் தேசிய காங்கிரஸ் அமைப்பாளராகப் பதவி வகித்த உதுமாலெப்பைக்கு, சில தினங்களுக்கு முன்னர் பிரதி தலைவர் பதவி வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

கிழக்கு மாகாண அமைச்சராக இரு தடவை பதவி வகித்த இவர், முஸ்லிம் காங்கிரசின் மூலம் தனது அரசியலை ஆரம்பித்தார்.

தொடர்பான செய்தி: 

01) அதாஉல்லா, உதுமாலெப்பைக்கு இடையே பிளவு: படுக்கையில் விழுகிறதா தேசிய காங்கிரஸ்?

02) அதாஉல்லா – உதுமாலெப்பை பிளவு விவகாரம்: பிள்ளையார் பிடிக்கப்போய் குரங்கான கதை

03) அதாஉல்லாவின் தூண்டிலும், இரை ‘கவ்வாத’ உதுமாலெப்பையும்: வலுக்கிறது பிளவு

04) உதுமாலெப்பையை அதாஉல்லா, மட்டம் தட்டிப் பேசியதாக குற்றச்சாட்டு

Comments

புதிது பேஸ்புக் பக்கம்