நீரிழிவைக் கட்டுப்படுத்தும் புதிய நெல் வகை; அறிமுகப்படுத்துகிறது விவசாய அமைச்சு

🕔 July 25, 2018

நீரிழிவு நோயை கட்டுப்படுத்துவதற்கு உதவும் நெல் வகையொன்றை விவசாய அமைச்சு அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது.

இந்த நெல் வகையின் பெயர் ‘நீரோகா’ எனத் தெரிவிக்கப்படுகிறது.

இரத்தத்தில் சீனியின் அளவைக் கட்டுப்படுத்தும் இந்தப் புதிய நெல்லினத்தை அம்பலாந்தோட்டை நெல் ஆராய்ச்சி நிலையம் அறிமுகப்படுத்தியுள்ளது.

இந்த நெல் இனத்தில் குறைந்த அளவு புரதம் காணப்படுவதனால், இரத்தத்தில் சீனியின் அளவை கட்டுப்படுத்த முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது பரீட்சார்த்த மட்டத்திலுள்ள இந்த நெல் இனத்தின் செய்கையை அமைச்சர் மஹிந்த அமரவீர அண்மையில் நேரில் சென்று பார்வையிட்டார்.

புரதச்சத்து உணவை மக்கள் கூடுதலாக உட்கொள்வதால், சீனியின் அளவு அதிகரிப்பதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இதற்குத் தீர்வாக புதிய நெல்லினம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக அம்பலாந்தோட்டை நெல் ஆராய்ச்சி நிலையம் தெரிவித்துள்ளது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்