ஞானசார தேரர் கோரிய சந்தர்ப்பத்தை வழங்க, நீதிமன்றம் மறுப்பு

🕔 June 15, 2018

ஹோமாகம நீதவான் நீதிமன்றில் பொதுபலசேனா அமைப்பின் செயலாளர் ஞாசார தேரர் தனது கருத்தைத் தெரிவிப்பதற்கு சந்தர்ப்பம் கேட்டபோதும், நீதிவான் அதனை மறுத்த சம்பவமொன்று நேற்று வியாழக்கிழமை இடம்பெற்றது.

ஞானசார தேரருக்கு நேற்று வியாழக்கிழமை, ஹோமாகம நீதிமன்றம் கடூழிய சிறைத் தண்டனை வழங்கி தீர்ப்பளித்தது. நீதிவான் தீர்ப்பினை வாசித்த பின்னர், பிரதிவாதி கூண்டில் நின்ற ஞானசார தேரர், தனது கருத்தைத் தெரிவிக்க சந்தர்ப்பமளிக்குமாறு கேட்டார்.

ஆனால், அவ்வாறு சந்தர்ப்பம் வழங்க முடியாது என்று கூறிய நீதிவான், தேவையாயின் தீர்ப்புக்கு எதிராக மேன்முறையீடு செய்யலாம் எனத் தெரிவித்தார்.

இரண்டு குற்றச்சாட்டுக்களுக்கு தலா ஆறு மாதம் வீதம், ஒரே நேரத்தில் கடூழியச் சிறைத் தண்டனையை அனுபவிக்க வேண்டும் என ஞானசார தேரருக்கு தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

தொடர்பான செய்தி: ஞானசார தேரருக்கு ஒரு வருட கடூழிய சிறைத்தண்டனை; அபராதமும் விதிப்பு

Comments

புதிது பேஸ்புக் பக்கம்