அட்டாளைச்சேனை பிரதேச சபை உறுப்பினர் பதவியிலிருந்து விலகிக் கொள்ள அன்சில் தீர்மானம்

🕔 May 11, 2018

– மப்றூக் –

ட்டாளைசச்சேனை பிரதேச சபையின் முன்னாள் தவிசாளரும் தற்போதைய உறுப்பினருமான சட்டத்தரணி எம்.ஏ. அன்சில், தனது உறுப்பினர் பதவியை ராஜிநாமா செய்யத் தீர்மானித்துள்ளதாக ‘புதிது’ செய்தித்தளத்துக்குத்  தெரிவித்தார்.

இதேவேளை, நேற்று வியாழக்கிழமை நடைபெற்ற அட்டாளைச்சேனை பிரதேச சபையின் மூன்றாவது அமர்வில் கலந்து கொண்டு உரையாற்றிய அன்சில்; “இது எனது இறுதி அமர்வாகும்” எனத் தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

ஐக்கிய மக்கள் கூட்டமைப்பு சார்பில் மயில் சின்னத்தில் பாலமுனையில் போட்டியிட்டு அன்சில் வெற்றி பெற்றார்.

ஆயினும், பிரதேச சபையில் தான் குறுகிய காலத்துக்கே பதவி வகிப்பேன் என்றும், பின்னர் தனது இடத்துக்கு பாலமுனை 02ம் பிரிவைச் சேர்ந்த பட்டியல் வேட்பாளர் சிறாஜ் என்பரை நியமிக்கவுள்ளதாகவும் அன்சில் ஏற்கனவே தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இவ்வாறானதொரு பின்னணியிலேயே, தற்போது தனது உறுப்பினர் பதவியிலிருந்து விலகிக் கொள்ளப் போவதாக அன்சில் தெரிவித்துள்ளார்.

இம்முறை நடைபெற்ற உள்ளுராட்சித் தேர்தலில் அன்சிலைத் தோற்கடிப்பதற்காக மு.காங்கிரசின் தலைவர் ரஊப் ஹக்கீம் பல்வேறு அரசியல் காய்நகர்த்தல்களை மேற்கொண்ட போதும், அவற்றினையெல்லாம் தாண்டி அன்சில் வெற்றி பெற்றிருந்தார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்