ஓய்வுபெற்ற அதிபர் கரிம், பராட்டிக் கௌரவிப்பு

🕔 May 10, 2018

– யூ.கே. காலித்தீன் –

சாய்ந்தமருது அரசினர் முஸ்லிம் கலவன் பாடசாலையில் 13 வருடங்கள் அதிபராகக் கடமையாற்றி ஓய்வு பெற்றுச் சென்ற எம்.ஐ.ஏ. கரிம், அந்தப் பாடசாலை சமூகத்தினரால் பாராட்டி கௌரவிக்கப்பட்டார்.

இந்த நிகழ்வு – நேற்று புதன் கிழமை, பாடசாலையின் அதிபர் யூ.எல். நஸார் தலைமையில் நடைபெற்றது.

1978.03.22 ஆம் திகதி ஆசியராக நியமனம் பெற்ற கரிம்; அன்று தொடக்கம் 1981 வரை வெலிமடை குருத்தலாவ முஸ்லிம் தேசிய பாடசாலையிலும், 1981தொடக்கம் 1991 காலப்பகுதியில் கல்முனை சாஹிரா தேசிய பாடசாலையிலும் பணியாற்றினார்.

அதன்பின்னர் 1991 தொடக்கம் 2005 வரை கல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரியில் பிரதி அதிபராகவும் 2005 தொடக்கம் 2017 ஜூன் 05 வரை சாய்ந்தமருது அரசினர் முஸ்லிம் கலவன் பாடசாலையில் (ஜி.எம்.எம்.எஸ்) 13 ஆண்டுகள் அதிபராகவும் கடமையாற்றினார்.

இதனையடுத்து, ஓய்வு பெற்ற அதிபருக்கு அதே பாடசாலையின் அதிபர், பிரதி அதிபர், ஆசிரியர்கள் மற்றும் பாடசாலை அபிவிருத்தி சங்க உறுப்பினர்கள் சார்பில் கௌரவம் வழங்கப்பட்டது.

இந்நிகழ்வில் கல்முனை வலயக் கல்விப் பணிப்பாளர் எம்.எஸ். அப்துல் ஜலீல், கல்முனை பிரதி வலயக் கல்வி பணிப்பாளர் ஏ.எல்.எம். முக்தார், உதவி கல்விப் பணிப்பாளர் நஸ்மியா ஜனுஷ், சாய்ந்தமருது கோட்டக் கல்வி அதிகாரி ஐ.எல்.ஏ. ரஹ்மான், கல்முனை பிராந்திய மின்பொறியியலாளர் எம்.ஆர்.எம்.பர்ஹான்.
கல்முனை மாநகர சபை முன்னாள் உறுப்பினர் ஏ. வசீர்
உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்