ஊடகவியலாளர் அஸ்ஸாமுக்கு விடுத்த அழைப்பை, குற்றப் புலனாய்புத் திணைக்களம் மீளப் பெற்றது

🕔 May 10, 2018

பிபிசி செய்தியாளர் அஸ்ஸாம் அமீனை விசாரணையொன்றுக்காக அழைத்திருந்த குற்றப் புலனாய்வுத் திணைக்களம், அந்த அழைப்பினை இன்று வியாழக்கிழமை மீளப் பெற்றுக் கொண்டுள்ளது.

ஜனாதிபதி ஊடகப் பிரிவின் ட்விட்டர் பதிவுக்கு கருத்தொன்றினை எழுதியமை தொடர்பில் விசாரணை மேற்கொள்வதற்காக அஸ்ஸாம் அமீனை குற்றப் புலனாய்வுத் திணைக்களம் இன்று வியாழக்கிழ சமூகமளிக்குமாறு அழைத்திருந்தது.

இந்த நிலையில், இன்று காலை தன்னைத் தொடர்பு கொண்ட பொலிஸார்; குற்றப் புலனாய்வுத் திணைக்களத்துக்கு சமூகமளிக்கத் தேவையில்லை என்று தன்னிடம் கூறியதாக, தனது ட்விட்டர் மற்றும் பேஸ்புக் பதிவுகளில் அஸ்ஸாம் தெரிவித்துள்ளார்.

மேலும் அஸ்ஸாமின் அந்தப் பதிவுகளில்; “இன்று காலை தொலைபேசி மூலம் என்னைத் தொடர்பு கொண்ட பொலிஸார், குற்றப் புலனாய்வு திணைக்களத்துக்கு நான் வருகைதரத் தேவையில்லை எனக் கூறினர். கடிதம் மூலமாகவும் இதனைத் தெரிவித்துள்ளனர்.

அதேவேளை, எனக்கு ஏற்பட்ட அசௌகரியங்களுக்காகவும் அவர்கள் வருத்தம் தெரிவித்தனர்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

தொடர்பான செய்தி: பிபிசி செய்தியாளர் அஸ்ஸாமை, குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் ஆஜராகுமாறு அழைப்பு

Comments

புதிது பேஸ்புக் பக்கம்