இந்தியாவிலும் இருக்கிறது, ‘மத்தல’ விமான நிலையம்

🕔 August 27, 2015

Indian airport - 123
ந்தியாவின் ராஜஸ்தான் மாநிலத்தில் 1100 கோடி இந்திய ரூபா செலவில் (2250 கோடி இலங்கை ரூபாய்) நிர்மாணித்து திறந்து வைக்கப்பட்ட ஜெய்சால்மர் சர்வதேச விமான நிலையத்தில், இதுவரை, ஒரு விமானம் கூட தரையிறங்கவில்லை என்கிற – கவலை தரும் செய்தியொன்று வெளியாகியுள்ளது.

இந்த விமான நிலையத்தினை நிர்மாணிப்பதற்கு சுமார் இரண்டரை ஆண்டுகள் ஆனதாகத் தெரிவிக்கப்படுகிறது. மேலும், இந்த விமான நிலையமானது, ஆண்டுக்கு 03 லட்சம் பயணிகளைக் கையாளும் வகையில் பிரம்மாண்டமாக கட்டப்பட்டுள்ளது. 180 பேர் பயணிக்கும் ஜெட் விமானங்கள் மூன்று தரையிறங்குவதற்கான தளங்களும் இங்குள்ளன.

ஆனால், இந்த விமான நிலையம் திறக்கப்பட்டு இன்று வரை, ஒரு விமானம் கூட இங்கு வரவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது. 2009 ஆம் ஆண்டிலிருந்து இதுவரை, இந்திய மத்திய அரசானது, 08 விமான நிலையங்களில் 3,200 கோடி இந்திய ரூபாய் வரை செலவிட்டுள்ளது. இந்த விமான நிலையங்களுக்கு – வழக்கமான சேவை அளிக்கும் விமானங்களெவையும் வந்து செல்லவில்லை என்பதுதான் உண்மை நிலையாக உள்ளது.

இந்தியாவில் உள்ள 100 க்கும் மேற்பட்ட உள்நாட்டு விமான நிலையங்களில், அரைவாசிக்கும் மேலானவற்றில், வழக்கமான சேவையளிக்கும் விமான போக்குவரத்துகள் எவையும் நடைபெறுவதில்லை என்பதுதான் பரிதாப நிலையாக உள்ளது.

43 உள்நாட்டு விமான நிலையங்களில் மட்டும்தான், விமான சேவை நடை பெறுகிறது. மற்ற 59 விமான நிலையங்களை – எப்போதாவது தனியார் விமானங்கள், தங்கள் உபயோகத்துக்கு பயன்படுத்திக் கொள்கின்றன.

மேற்குறிப்பிட்ட, ஜெய்சால்மார் விமான நிலையத்தில் – பயணிகளின் பெட்டிகளைக் கையாளும் பட்டிகள் பயன்படுத்தப்படாமல் இருப்பதால், அதன் – மேல் பகுதியில் புறாக்கள் கூடு கட்டி, குஞ்சு பொரித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இலங்கையிலும், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால், மத்தள 2013 ஆம் ஆண்டு மத்தள சர்வதேச விமான நிலையம் நிர்மாணித்து திறந்து வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இந்த விமான நிலையத்தின் நிர்மாணத்துக்காக, சுமார் 210 மில்லியன் அமெரிக்க டொலர் (இலங்கை நாணயப் பெறுமதியில் 2800 கோடி ரூபாவுக்கும் மேல்) செலவானது.

ஆயினும், இந்த விமான நிலையத்தில் விமானங்கள் எவையும் தரையிறங்குவதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

எந்த ஒரு திட்டத்தைத் தொடங்கும் முன்பும் – அதற்கான நடைமுறை சாத்தியம், லாப, நஷ்ட கணக்குகளைப் பார்க்காமல், அரசியல் ஆதாயத்தை மட்டுமே நோக்காகக் கொண்டு யோசித்தால், இதைத் தவிர வேறெதுவும் நடக்கும் என எதிர்பார்க்க முடியாது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்