ஐ.தே.கட்சிக்கு 30, சு.கட்சிக்கு 15; அமைச்சுப் பொறுப்புக்களைப் பகிர்வதில் இணக்கம்

🕔 August 27, 2015

UNP+SLFP - 098தேசிய அரசாங்கத்தில் – ஐக்கிய தேசியக் கட்சிக்கு 30 அமைச்சுப் பொறுப்புக்களும், ஸ்ரீலங்கா சுதந்திர கட்சிக்கு 15 அமைச்சுப் பொறுப்புக்களையும் பகிர்ந்து கொள்வதற்கு இணக்கம் காணப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகுிறது.

இதற்கிணங்க, நீதி மற்றும் சட்ட ஒழுங்கு, மின்சக்தி மற்றும் சக்தி வலு, ஊடகத்துறை, உள்விவகாரங்கள், காணி மற்றும் பெருந்தெருக்கள் உள்ளிட்ட மேலும் பல அமைச்சுக்களுக்கு புதிதாக அமைச்சர்கள் நியமிக்கப்படுவார்கள் என்று தெரியவந்துள்ளது.

அத்துடன், முன்னர் இருந்த அமைச்சுகளுக்கு மேலதிகமாகவும், பல அமைச்சுகள் உருவாக்கப்படும் என்றும் அறிய முடிகிறது.

இதன்படி – உயர் கல்வி, விவசாயம், பெருந்தெருக்கள், கனிய வளம், சமுர்த்தி மற்றும் மீன்பிடி உள்ளிட்ட அமைச்சுகள் – சுதந்திர கட்சிக்குக் கிடைக்கும் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்