பௌசி சொன்னது தவறு; பிரேரணையை சுதந்திரக் கட்சி ஆதரித்து வாக்களிக்கும்: டிலான், யாப்பா தெரிவிப்பு

🕔 April 4, 2018

பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை மீதான வாக்கெடுப்பில், சுதந்திரக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்து கொள்ள மாட்டார்கள் என்று, ராஜாங்க அமைச்சர் ஏ.எச்.எம். பௌசி தெரிவித்த கருத்தை, சுதந்திரக் கட்சியின் இரண்டு அமைச்சர்கள் மறுத்துள்ளனர்.

ராஜாங்க அமைச்சர்களான லக்ஷ்மன் யாப்பா அபேவர்த்தன மற்றும் டிலான் பெரேரா ஆகியோரே, பௌசி வெளியிட்டுள்ள தகவலை மறுத்துள்ளனர்.

பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையை, சுதந்திரக் கட்சி ஆதரிக்கும் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

பிரேரணையை ஆதரித்து சுதந்திரக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் வாக்களிப்பதென அமைச்சர் மஹிந்த அமரவீரவின் இல்லத்தில் நடைபெற்ற கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது என்றும், ராஜாங்க அமைச்சர்களான யாப்பா மற்றும் டிலான் ஆகியோர் கூறியுள்ளனர்.

குறித்த கூட்டத்துக்கு அமைச்சர் பௌசி வருகை தரவில்லை என்றும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்