ஏமாந்து போன யானைப் பாகன்; அழுத்தம் கொடுத்தாரா அம்பாறை அமைச்சர்?

🕔 March 3, 2018

– அஹமட் –

முஸ்லிம் காங்கிரசின் தலைவர் ரஊப் ஹக்கீம், இன்று சனிக்கிழமை பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை அம்பாறைக்கு அழைத்து வர முடியும் என்கிற நம்பிக்கையில் இருந்த போதும், கடைசியில் அது நடைபெறாமல் போயிற்று.

நேற்று வெள்ளிக்கிழமை ஹக்கீமை அம்பாறை மாவட்டத்திலிருந்து தொடர்பு கொண்ட ஒருவர், நாளை (சனிக்கிழமை) பிரதம மந்திரியுடன் அம்பாறை வருவீர்களா என்று கேட்டபோது, ஹக்கீம் ‘ஆம்’ என்று தெரிவித்திருந்தார்.

எவ்வாயினும், ‘அம்பாறையிலுள்ள அமைச்சர்’ ஒருவரின் அழுத்தினாலேயே, அங்கு வருவதை ரணில் விக்ரமசிங்க தவிர்த்துக் கொண்டதாக, அரசியலரங்கில் பேசரப்படுகிறது.

கடந்த உள்ளுராட்சித் தேர்தலின் போது, அம்பாறை மாவட்டத்தில் ஐக்கிய தேசியக் கட்சியின் யானைச் சின்னத்தில் முஸ்லிம் காங்கிரஸ் போட்டியிட்டபோது, “ஐக்கிய தேசியக் கட்சி என்கிற யானையின் பாகன் நானே” என்று, மு.கா. தலைவர் ஹக்கீம் பிரசார மேடைகளில் தெரிவித்திருந்தமை நினைவு கொள்ளத்தக்கது.

எவ்வாறாயினும், ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரான ரணில் விக்ரமசிங்கவை, முஸ்லிம்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்ட அம்பாறைக்கு அழைத்து வர முடியாத நிலையில் ஹக்கீம் உள்ளமை பரிதாபத்துக்குரியதாகும்.

மு.கா. தலைவர் இன்று சனிக்கிழமை பிரதமரை அழைத்துக் கொண்டு அம்பாறை வருவார் என, ஏற்கனவே, பிரதியமைச்சர் எச்.எம்.எம். ஹசீரின் ஊடகப் பிரிவு அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

மு.கா. தலைவருடனான, அம்பாறை மாவட்டத்தைச் சேர்ந்தவரின் தொலைபேசி உரையாடலை கீழே காணலாம்.

வீடியோ

Comments