சம்மாந்துறை ஆதார வைத்தியசாலையில், கருணையுள்ளத்தை வெளிப்படுத்திய தாதி

🕔 March 3, 2018

ம்மாந்துறை ஆதார வைத்தியசாலையில் தாதியாக கடமையாற்றும்  ஆர். ருத்ரகாந்தி பொன்னம்பலம் என்பவர், அவர் கடமையாற்றும் அதே வைத்தியசாலைக்கு ஒரு தொகுதி கட்டில் விரிப்புக்களை  இன்று சனிக்கிழமை அன்பளிப்புச் செய்தார்.

சம்மாந்துறை ஆதார வைத்தியசாலையின் முதல் தாதியர் பரிபாலகியான  ஆர். ருத்ரகாந்தி – ஒரு சமூக சேவையாளராவார். தான் பணியாற்றும் வைத்தியசாலையின் தேவை அறிந்து , மேற்படி கட்டில் விரிப்புக்களை இவர் அன்பளிப்புச் செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதற்கு முன்னரும், சம்மாந்துறை ஆதார வைத்தியசாலையின் சிறுவர் விடுதிக்கு, குடிநீர் சுத்திகரிப்பு தாங்கி ஒன்றினையும் ருத்ரகாந்தி வழங்கியிருந்தார்.

மேற்படி, தாதியின் கருணையுள்ளம் கொண்ட செயற்பாடு பாராட்டத்தக்கதாகும்.

மேலும், ஏனையோருக்கும் இவரின் இந்த செயற்பாடுகள் முன்மாதிரியாக அமைதல் வேண்டும்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்