தமிழில் தேசிய கீதம் பாடப்பட்டமையே, ஐ.தே.க.வின் வாக்கு வீழ்ச்சிக்கு காரணமாம்: அமைச்சர் மாரப்பன தெரிவிப்பு

🕔 February 14, 2018

தேசிய கீதம் தமிழில் பாடப்பட்ட ஒவ்வொரு தடவையும் 50 ஆயிரம் பௌத்த, சிங்கள வாக்குளை ஐக்கிய தேசியக் கட்சி இழக்கின்றது என்று,  வெளிவிவகார அமைச்சர் திலக் மாரப்பன தெரிவித்துள்ளார் என ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

ரணில் விக்ரமசிங்க தலைமையில் நடைபெற்ற, ஐ.தே.கட்சியின் உயர் மட்டக் கூட்டத்திலேயே, அவர் இந்தக் கருத்தை தெரிவித்துள்ளார் எனவும் அந்த ஊடகம் குறிப்பிட்டுள்ளது.

நாட்டின் சுதந்திர தினமன்று ஜனாதிபதி மற்றும் பிரதமரின் பங்குபற்றுதலுடன் நடைபெற்ற பிரதான நிகழ்வில், தமிழில் தேசியக் கீதம் பாடப்பட்டமையே, உள்ளுராட்சித் தேர்தலில் ஐ.தே.க.வுக்கு பின்னடைவு ஏற்படக் காரணம் எனவும் அவர் அங்கு கூறியுள்ளார்.

எவ்வாறாயினும், திலக் மாரப்பனவின் இந்தக் கருத்தை நிதியமைச்சர் மங்கள சமரவீர நிராகரித்துள்ளார்.

இந்த நிலையில் இந்தக் கூட்டத்தில் கருத்து வெளியிட்ட அமைச்சர் சஜித் பிரேமதாஸ; சமுர்தி அமைச்சு ஐ.தே.கட்சியிடம் இல்லாததால் மக்களுடன் அதிக நெருக்கத்தை ஏற்படுத்த முடியவில்லை என்றும், அதனால் அந்த அமைச்சினை ஐ.தே.கட்சி பெற்றுக்கொள்ள வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளார்.

இதேவேளை, விவசாயிகளுக்கு உரிய வேளையில் பசளை கிடைக்காமையினால், கிராம மட்டங்களில் ஐ,தே.கட்சிக்கு பின்னடைவு ஏற்பட்டதாக அமைச்சர் ஹரிசன் இங்கு தெரிவித்தாகவும் அந்த ஊடகம் குறிப்பிட்டுள்ளது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்