மு.காங்கிரசில் பதவி வகிக்கும் நயீமுல்லா, தராசு சின்ன வேட்பாளர் பட்டியலில் கையெழுத்திட்டமை செல்லாது: பசீர் சேகுதாவூத் தகவல்

🕔 January 21, 2018

– முன்ஸிப் அஹமட் –

ராசுச் சின்னத்தைக் கொண்ட முஸ்லிம் தேசியக் கூட்டமைப்பில் செயலாளர் பதவி வகிக்கும் எம். நயீமுல்லா என்பவர், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் பிரதித் தவிசாளராகவும் பதவி வகித்துக் கொண்டு, தராசு சின்னத்தைக் கொண்ட முஸ்லிம் தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளர் பட்டியலில் கையெழுத்திட்டமை, செல்லுபடியாகாது என்று, ஐக்கிய சமாதான கூட்டமைப்பின் தவிசாளரும், முன்னாள் அமைச்சருமான பசீர் சேகுதாவூத் தெரிவித்தார்.

ஏறாவூரில் நேற்றிரவு நடைபெற்ற தேர்தல் பிரசாரங் கூட்டமொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இந்த தகவலைக் கூறினார்.

முஸ்லிம் காங்கிரசின் யாப்பிலோ, தராசுச் சின்னத்தைக் கொண்ட முஸ்லிம் தேசியக் கூட்டமைப்பின் யாப்பிலோ, அல்லது இலங்கை அரசின் யாப்பிலோ, ஒருவர் இரண்டு கட்சிகளில் அங்கத்துவம் வகிக்க முடியும் என்று குறிப்பிடப்படவில்லை. இந்த நிலையில், முஸ்லிம் காங்கிரசின் பிரதித் தவிசாளராகப் பதவி வகிக்கும் நயீமுல்லா என்பவர், தராசு சின்னத்தைக் கொண்ட முஸ்லிம் தேசியக் கூட்டமைப்பு எனும் கட்சியின் செயலாளராகவும் பதவி வகிக்க முடியாது என்றும் இதன் போது பசீர் சேகுதாவூத் விபரித்தார்.

தராசுச் சின்னத்தைக் கொண்ட முஸ்லிம் தேசியக் கூட்டமைப்பு எனும் கட்சி, மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள ஏறாவூர் நகர சபை மற்றும் காத்தான்குடி நகர ஆகிய இடங்களில் போட்டியிடுகிறது. இதே இடங்களில் பசீர் சேகுதாவூத் தவிசாளராகப் பதவி வகிக்கும் ஐக்கிய சமானதான கூட்டமைப்பு கட்சி – வண்ணத்துப் பூச்சி சின்னத்தில் போட்டியிடுகின்றமை குறிப்பிடத்தக்கது.

வீடியோ

Comments