தேசிய அடையாள அட்டையில்லாத வேட்பாளர்கள், இரண்டு இடங்களுக்குள் பிரவேசிக்கத் தடை: தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவிப்பு

🕔 December 29, 2017

ள்ளுராட்சி தேர்தலுக்கான வாக்கெண்ணும் நிலையம் மற்றும் தேர்தல் வாக்களிப்பு நிலையம் ஆகியவற்றுக்குள் பிரவேசிப்பதற்கு, தேசிய அடையாள அட்டையில்லாத எந்தவொரு அபேட்சகர்களுக்கும் அனுமதி வழங்கப்பட மாட்டாது என்று தேர்தல்கள்  ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

உள்ளுராட்சிச் தேர்தல்களில் இம்முறை வேட்பாளர்களாக களமிறங்கியுள்ளவர்களில் 10 வீதமானோருக்கு தேசிய அடையாள அட்டை இல்லை என, ஏற்கனவே தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்திருந்தது.

அத்துடன் வேட்பாளர்களுக்காக வழங்கப்பட்டுள்ள அடையாள அட்டையை பயன்படுத்தி, வாக்களிக்க முடியாது எனவும் தேர்தல்கள் ஆணைக்குழு கூறியுள்ளது.

வாக்காளர்கள் தேர்தலில் வாக்களிப்பதற்கு ​தேசிய அடையாள அட்டை, சாரதி அனுமதிப் பத்திரம், கடவுச்சீட்டு, மற்றும்  ஓய்வூதிய அடையாள அட்டை ஆகியவற்றில், ஏதேனும் ஒன்றை வைத்திருத்தல் வேண்டும் எனவும் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இதேவேளை, இம்முறை வாக்காளர் பட்டியலில் தமது பெயர்களைப் பதிவு செய்துள்ளவர்களில் சுமார் 03 லட்சம் பேருக்கு, தேசிய அடையாள அட்டை இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்