எத்தனை சபையில் தோற்றாலும் பரவாயில்லை, அன்சில் வென்று விடக் கூடாது: ஹக்கீமின் சபதம்

🕔 December 14, 2017

– அஹமட் –

ம்பாறை மாவட்டத்திலுள்ள உள்ளுராட்சி சபைகளுக்கான தேர்தலில், எத்தனை சபையில்  முஸ்லிம் காங்கிரஸ் தோற்றுப் போனாலும் பரவாயில்லை, ஆனால் அட்டாளைச்சேனையின் முன்னாள் தவிசாளர் சட்டத்தரணி எம்.ஏ. அன்சில் மட்டும், வெற்றி பெற்று விடக் கூடாது என்று முஸ்லிம் காங்கிரசின் தலைவர் ரஊப் ஹக்கீம் கூறியதாகத் தெரிய வருகிறது.

மு.காங்கிரசின் பாலமுனை அமைப்பாளராகவும், மு.கா.வின் உயர்பீட உறுப்பினராகவும் பதவி வகித்த அன்சில், அந்தக் கட்சியிலிருந்து பசீர் சேகுதாவூத் ஹசனலி தரப்பினருடன் இணைந்து கொண்டார்.

இந்த நிலையில், தற்போது அட்டாளைச்சேனை பிரதேச சபைக்கான தேர்தலில் ஐக்கிய மக்கள் கூட்டணி சார்பாக பாலமுனையில் அன்சில் போட்டியிடுகிறார்.

எனவே, அன்சிலுக்கு எதிராக பாலமுனையில் வேட்பாளர் ஒருவரைக் களமிறக்கும் பொருட்டு, கொழும்பிலிருந்து ஹெலிகொப்டரில் பாலமுனைக்கு வந்த ரஊப் ஹக்கீம், மிகவும் சிரமத்துக்கு மத்தியில் நபரொருவரை வேட்பாளராக கைப்பற்றிக் கொண்டு, கொழும்பு சென்றார்.

இதன்போதே, அம்பாறை மாவட்டத்திலுள்ள உள்ளுராட்சி சபைகளுக்கான தேர்தலில், எத்தனை சபையில்  முஸ்லிம் காங்கிரஸ் தோற்றுப் போனாலும் பரவாயில்லை, ஆனால் அட்டாளைச்சேனையின் முன்னாள் தவிசாளர் சட்டத்தரணி அன்சில் மட்டும், வெற்றி பெற்று விடக் கூடாது என்று, ஹக்கீம் கூறியுள்ளார்.

எவ்வாறாயினும், முன்னாள் தவிசாளர் சட்டத்தரணி அன்சிலுக்கு பாலமுனையில் அதி கூடியளவான ஆதரவு காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்