ஹனீபா மதனியின் முயற்சியின் பலனாக, அக்கரைப்பற்றின் இரண்டு வீதிகள் புனர் நிர்மாணம்

🕔 December 14, 2017

– றிசாட் ஏ காதர் –

மிக நீண்ட காலமாக கவனிப்பாரற்றுக் காணப்பட்ட அக்கரைப்பற்று 11ஆம் வட்டாரத்தின் மஜீட் வீதியும், 03ஆம் வட்டாரத்தின் ஆலிம் வீதியும் பல லட்சம் ரூபாசெலவில் புனர் நிர்மாணம் செய்யப்படுவதற்கான வேலைகள்  அக்கரைப்பற்று மாநகர சபையின் முன்னாள் எதிர்க்கட்சித்தலைவரும், சிறிலங்கா முஸ்லீம் காங்கிரஸின் அக்கரைப்பற்று அமைப்பாளருமான எஸ்.எல்.எம். ஹனீபா மதனி தலைமையில் இடம்பெற்றன.

குன்றுங்குழியுமாகவும் போக்குவரத்துக்கு பொருத்தமற்றும் காணப்படும்  இந்த வீதிகளின்ப புனர் நிர்மாணப்பணிக்குத் தேவையான நிதியினை அரசாங்கத்திலிருந்து பெற்றுக் கொள்வதற்கான முயற்சிகளை ஹனீபா மதனி மேற்கொண்டார்.

அதன் பலனாக கிடைக்கப்பெற்ற நிதியினைக் கொண்டு,இவ்வீதிகளுக்கான அடிக்கல் நடும் நிகழவு அண்மையில் அண்மையில் இடம்பெற்றது.

குறித்த வீதி நிர்மாணப் பணிக்கு நிதியினை பெற்று, அவற்றினை புனரமைக்க உதவிமைக்காக, இப்பகுதிவாழ் மக்கள்  ஹனீபா மதனிக்கு நன்றியையும், பாராட்டினையும் தெரிவித்தனர்.

மேற்படி நிகழ்வில் அரசியல் செயற்பாட்டாளர்கள், சமூக ஆர்வலர்கள் உள்ளிட்ட பலர் சிறப்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்