புதல்வர்களை களமிறக்குகிறார் அதாஉல்லா; ஆட்டத்துக்கு தயாராகிறது அக்கரைப்பற்று மாநகரசபை

🕔 December 14, 2017

– முன்ஸிப் அஹமட் –

க்கரைப்பற்று மாநகரசபைக்கான தேர்தலில் முன்னாள் அமைச்சர் ஏ.எல்.எம். அதாஉல்லா தலைமையிலான தேசிய காங்கிரஸ் சார்பாக அவரின் இரண்டு புதல்வர்களையும் களமிறங்குகின்றார்.

தேசிய காங்கிரசின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான அதாஉல்லாவின் புதல்வர்களான சக்கி அஹமட் மற்றும் தில்ஷாத் அஹமட் ஆகியோரே, அக்கரைப்பற்று மாநகரசபைக்கான தேர்தலில் போட்டியிடுகின்றனர்.

அதாஉல்லாவின் மூத்த புதல்வர் சக்கி அஹமட், கடந்த முறை அக்கரைப்பற்று மாநகரசபைக்கான தேர்தலில் போட்டியிட்டு, அச்சபையின் மேயராகப் பதவி வகித்தமை குறிப்பிடத்தக்கது.

எவ்வாறாயினும், முன்னாள் அமைச்சர் அதாஉல்லா – தனது மகனை மேயராக்கியதன் மூலம், குடும்ப அரசியலை அக்கரைப்பற்றில் வளர்க்கிறார் என்கிற விமர்சனமொன்று உருவானது.

இவ்வாறானதொரு நிலையிலேயே, தற்போது தனது இரண்டு புதல்வர்களையும் அக்கரைப்பற்று மாநகரச சபைக்கான தேர்தலில் அதாஉல்லா களமிறக்கத் தீர்மானித்துள்ளார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்