அம்பாறை மாவட்டத்தில் மயில், குதிரை, வீடு ஆகியவற்றின் வேட்புமனுக்கள் நிராகரிப்பு

🕔 December 14, 2017

–  முன்ஸிப் –

ம்பாறை மாவட்டம் அக்கரைப்பற்று மாநகர சபைத் தேர்தலில் போட்டியிடும் பொருட்டு, ஐக்கிய மக்கள் கூட்டமைப்பு சார்பாக, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சமர்ப்பித்த வேட்புமனு நிராகரிக்கப்பட்டது.

93 உள்ளுராட்சி சபைகளிலும் போட்டியிடுவதற்காக வேட்புமனுக்களைத் தாக்கல் செய்வதற்கான கால எல்லை இன்று வியாழக்கிழமை நண்பகல் 12.00 மணியுடன் நிறைவடைந்தது.

அந்த வகையில் அம்பாறை மாவட்ட செயலகத்தில் இன்று சமர்ப்பிக்கப்பட்ட வேட்பு மனுக்களில், அக்கரைப்பற்று மாநகர சபைத் தேர்தலில் போட்டியிடும் பொருட்டு, ஐக்கிய மக்கள் கூட்டமைப்பு சார்பாக, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சமர்ப்பித்த வேட்புமனு நிராகரிக்கப்பட்டது.

அபோன்று, சம்மாந்துறை பிரதேச சபையில் போட்டியிடும் பொருட்டு தேசிய காங்கிரஸ் சமர்ப்பித்த வேட்புமனுவும் நிராகரிக்கப்பட்டது.

அட்டாளைச்சேனை பிரதேச சபையில் போட்டியிடும் பொருட்டு, ஐக்கிய மக்கள் கூட்டமைப்பு சார்பாக – அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சமர்ப்பித்த வேட்புமனுவில், பாலமுனை வட்டாரமொன்றின் வேட்பாளரின் பெயர் நிராகரிக்கப்பட்டது.

அதேபோன்று, அதே வேட்புமனுவின் விகிதாசார வேட்பாாளர் பட்டியலிலும் வேட்பாளர் ஒருவரின் பெயர் நிராகரிக்கப்பட்டது.

மேலும், அம்பாறை மாவட்டத்தில் இலங்கை தமிழரசுக் கட்சி சார்பாக ஆலையடிவேம்பு மற்றும் சம்மாந்துறை பிரதேச சபைகளில் போட்டியிடுவதற்காக சமர்ப்பிக்கப்பட்ட வேட்புமனுக்களும் நிராகரிக்கப்பட்டன.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்