மியன்மார் முஸ்லிம்கள் மீதான தாக்குதலை கண்டித்து, சம்மாந்துறையில் பாரிய ஆர்ப்பாட்டம்

🕔 September 8, 2017

– யூ.எல்.எம். றியாஸ் –

மியன்மாரில் ரோஹிங்யா முஸ்லிம்கள் மீது மேற்கொள்ளப்படும் கண்மூடித்தனமான தாக்குதலை கண்டித்து, இன்று வெள்ளிக்கிழமை சம்மாந்துறையில் பாரிய கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

சம்மாந்துறை நம்பிக்கையாளர் சபை, ஜம்மியத்துல் உலமா சபை , மஜ்லிஸ் அஸ்ஸூரா சபை , சமூக சேவை அமைப்புக்கள் மற்றும் பொதுமக்கள் கூட்டாக இந்த கண்டனப் பேரணியை ஏற்பாடு செய்திருந்தனர்.

சம்மாந்துறை ஹிஜ்ரா ஜும்மா பள்ளிவாசலின் முன்றலில் விசேட  பிராத்தனை நடத்தப்பட்டு, ஹிஜ்ரா சந்தியில் இருந்து ஆரம்பமான கண்டனப் பேரணி, பொலிஸ் நிலைய வீதியூடாக பிரதேச செயலகத்தை சென்றடைந்தது.

ஆர்பாட்டத்தில் ‘மியன்மார் அரசே சொந்த நாட்டு மக்களை கொல்வதை நிறுத்து’, ‘உலக நாடுகளே மியன்மார் படுகொலைகளை நிறுத்துங்கள்’, ‘அப்பாவி மக்களை கொன்று குவிக்காதே’, போன்ற வாசகங்களை ஏந்தியவாறு ஆர்ப்பாட்டத்தில் மக்கள் ஈடுபட்டனர்.

இதன்போது ரோஹிங்யா முஸ்லிகள் மீதான கண்மூடித்தனமான தாக்குதலைக் நிறுத்தக்கோரியும், இத்தாக்குதலை நிறுத்துவதற்கு உலக நாடுகளுக்கு இலங்கை அரசாங்கம் அழுத்தங்கங்களைக் கொடுக்கக் கோரியும் சம்மாந்துறையின் உயர் சபைகளினால் பிரதேச செயலாளாளர் எஸ்.எல்.எம். ஹனீபாவிடம் மகஜர் ஒன்றும் கையளிக்கப்பட்டது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்