யாழ்ப்பாணத்தில் ‘பல்லி’ச் சாப்பாடு; பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் எங்கே?

🕔 September 8, 2017
யாழ்ப்பாணம் கே.கே.எஸ். வீதியில் நாச்சிமார் கோவில் அருகிலுள்ள உணவகமொன்றில் நபரொருவர் கொள்வனவு செய்த உணவுப் பொதியினுள் பல்லியொன்று இறந்து கிடந்த அதிர்ச்சிகரமான சம்பவமொன்ற நேற்று வியாழக்கிழமை இரவு இடம்பெற்றுள்ளது.

இதனையடுத்து குறித்த உணவை கொள்வனவு செய்தவர், உணவக உரிமையாளரை தொடர்பு கொண்டு, தனது உணவுப் பொதியில் பல்லி இறந்து கிடந்த விடயத்தை கூறியுள்ளார்.

எனினும் உணவக உரிமையாளர் தமது பிழையினை ஏற்றுக் கொள்ளாமல், உணவுப் பொதியினைப் பெற்றுக்கொண்ட விலைச்சீட்டு உள்ளதா? இந்த உணவு எங்களிடம் பெற்றுக் கொண்டதுதான் என்பதற்கு என்ன ஆதாரம் உள்ளது? என கேட்டதோடு, வாடிக்கையாளரை எச்சரிக்கும் தோரணையிலும் பேசியுள்ளார்.

இந்த அச்சுறுத்தலை எதிர்பாராத வாடிக்கையாளர், தனக்கு நேர்ந்த இந்த சம்பவம் குறித்து, சமூக வலைத்தளத்தில் கவலையுடன் பதிவிட்டுள்ளார்.

இதே வீதியிலுள்ள பிரபல உணவகமொன்று, இரண்டு கிழமைக்கு முன்னர் சீல் வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்