தென்கிழக்கு பல்கலைக்கழக மாணவர்களிடையே மோதல்; 20 பேர் வைத்தியசாலையில், 13 பேருக்கு வகுப்புத் தடை: இரு பீடங்கள் மூடப்பட்டன

🕔 August 31, 2017

தென்கிழக்கு பல்கலைக்கழக மாணவர் குழுக்களிடையே ஏற்பட்ட மோதலையடுத்து, பல்கலைக்கழகத்தின் இரு பீடங்களை மறு அறிவித்தல் வரை மூடுவதற்கு பல்கலைக்கழக நிர்வாகம் தீர்மானித்துள்ளது.

பல்கலைக்கழகத்தின் பொறியியல் பீட மாணவர்களுக்கும், தொழில்நுட்ப பீட மாணவர்களுக்கும் இடையில் நேற்று புதன்கிழமை இரவு மோதல் சம்பவமொன்று இடம்பெற்றது.

பல்கலைக்கழக வளாகத்தினுள் சுமார் 300 மாணவர்களிடையே ஏற்பட்ட மோதலையடுத்து, பாதிக்கப்பட்ட 20 மாணவர்கள் அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

பொறியியல் பீடத்தைச் சேர்ந்த சுமார் 200 மாணவர்கள், தொழில்நுட்ப பீட மாணவர்களின் விடுதியினுள் நுழைந்து இந்த தாக்குதலை நடத்தியுள்ளனர். இதன்போது அங்கு 70 மாணவர்கள் இருந்துள்ளனர்.

இந்த தாக்குதலையடுத்து இதனுடன் தொடர்புபட்ட 13 மாணவர்களை கல்வி நடவடிக்கைகளிலிருந்து பல்கலைக்கழக நிர்வாகம் தடை செய்துள்ளது.

இது தொடர்பான விசாரணைகள் நடந்து வருகின்றன.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்