வடக்கு முஸ்லிம்களின் மீள்குடியேற்றமும், இனவாத ஆர்ப்பாட்டமும்

🕔 July 17, 2017

– ஏ.எம். றிசாத்  –

னிநாடு கேட்டுப்போராடிய புலிகளுக்கும் இலங்கை அரசுகும் இடையிலான போர் முடிவடைந்த பின்னர், அரை நூற்றாண்டுகால அகதிவாழ்க்கை வாழ்ந்த வடக்கு முஸ்லிம் மக்கள், மீண்டும் தமது தாயக பூமியில் குடியேற ஆரம்பித்திருக்கும் நிலையில், இனவாத சக்திகளின் கையாட்களாக இருக்கும் வன்னி அரசியல் தலைமைகள், அதை தடுப்பதோடு, ஆர்ப்பாட்டங்களையும் மேற்கொள்கின்றனர்.

இனவாதத்தின் உச்ச கட்டமாக, நேற்று ஞாயிற்றுக்கிழமை மீள குடியேறும் மக்களுக்கு எதிராகவும் அந்த மக்களின் அரசியல் தலைமையாக இருக்கும் அமைச்சர் றிஷாட் பதியுதீனுக்கு எதிராகவும் ஆர்ப்பாட்டம் ஒன்றை வடக்கில் நடத்திமையானது வேதனையானதும் கண்டிக்கதக்கதுமான விடயமாகும்.

முல்லைத்தீவில் வடக்கு முஸ்லிம் மக்கள் பரம்பரையாக வாழ்ந்து வந்தனர். அவர்களின் வெளியேற்றத்தின் பின்னர், யுத்த காலத்தில் புலிகள் தங்களை பாதுகாத்துகொள்ளவும் பதுங்கி இருக்கவும், தங்களின் தலை நகராக முல்லைத்தீவை பயன்படுத்திக் கொண்டனர். அவர்கள் அங்கு மறைந்திருப்பதற்காக காடுகளை உருவாக்கினார்கள். யுத்ததின் பின்பு அங்கு குடியேற செல்லுகின்ற முஸ்லிம் மக்கள், தங்களின் சொந்த இடத்தை துப்பரவு செய்கின்றபோது, அதனைக் காடழிப்பாக இந்த இனவாத சக்திகள் காட்டமுனைவது வேதனைதரும் விடயமாகும்.

அமைச்சர் றிஷாட் பதியுதீன் குடியேற்றம் செய்கிறார், காடழிப்பு செய்கிறார் என்று சொல்லும் இனவாத சிந்தனையாளர்களே, யுத்தம் முடிந்தவுடன் தமிழ் மக்களை முதலில் காடழித்து மீள்குடியேற்றம் செய்ய வில்லையா? உங்கள் குடியேற்றத்துக்கு அவர் மீள்குடியேற்ற அமைச்சராக இருந்து அடிப்படை வசதிகள் செய்து தந்து உதவ வில்லையா? அப்போது முஸ்லிம் மக்கள் இனவாத சிந்தனையில் பார்க்கவில்லை. தமிழ் சகோதர இனமாகதான் பார்த்தனர். அவ்வாறு உங்கள் மீள் குடியேற்றத்துக்கு முன்னுரிமை தந்த அமைச்சர் றிஷாட் பதியுதீன், இன்று உங்களுக்கு இனவாதியாக தெரிகிறார்.

அங்கு குடியேறிவரும் முஸ்லிம்கள் மக்கள் வெளிநாட்டவர்களோ, வெளி மாவட்டத்தவர்களோ அல்லர். அந்த மாவட்டத்தில் புலிகளால் வெளியேற்றப்பட்ட மக்களும் அவர்களின் வாரிசுகளும்தான்.

எனவே, தமது அரசியல் இருப்பை பாதுகாக்க இனவாதம் பேசும் தமிழ் அரசியல் தலைமைகள், முஸ்லிம் மக்களின் மீள் குடியேற்றத்தை தடுக்காமல் உதவி செய்ய வேண்டும் என்பதே, வடக்கு முஸ்லிம்களின் கோரிக்கையாகும்.

தமிழ் இளைஞர் மற்றும் யுவதிகளை முஸ்லிம்களுக்கு எதிராகத் தூண்டிவிட்டு, சகோதர உறவுகளுக்குள் பிரிவை ஏற்படுத்தாமல் ஒற்றுமையாக வடக்கில் வாழவிடுங்கள் என்றுகேட்கின்றோம்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்