அரசாங்கத்திலிருந்து விலக, அமைச்சர் ஜோன் செனவிரட்ன தீர்மானம்

🕔 July 16, 2017

ரசாங்கத்தில் இருந்து விலகுவதற்கு, தான்  தீர்மானித்துள்ளதாக அமைச்சர் ஜோன் செனவிரத்ன தெரிவித்துள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து செயற்படுவதால் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தேய்ந்து போகுமே அன்றி வலுவடையாது என ஜனாதிபதியிடம் கூறியதாகவும் அவர் கூறியுள்ளார்.

எனவே, அரசாங்கத்திலிருந்து விலகி, எதிரணியில் இணைந்து செயற்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், அரசாங்கத்தில் இருந்து விலகும் நிலைப்பாட்டினை நிறுத்தி வைக்குமாறு, ஜனாதிபதி விடுத்த கோரிக்கையை ஆராய்ந்து வருவதாகவும் ஜோன் செனவிரத்ன தெரிவித்துள்ளார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்