போலி பேஸ்புக் கணக்குகள் தொடர்பாக, 04 மாதங்களில் 1100 முறைப்பாடுகள்

🕔 May 2, 2017

மூக வலைத்தளங்கள் தொடர்பாக கடநத 04 மாதங்களில் சுமார் 1100 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக இலங்கை தேசிய கணினி அவசர தயார்நிலை அணி இன்று செவ்வாய்கிழமை தெரிவித்துள்ளது.

இவற்றினுள் அதிகமான முறைப்பாடுகள், போலியான பேஸ்புக் கணக்குகள் பற்றியவை என்று, தேசிய கணினி அவசர தயார்நிலை அணியின் தகவல் பாதுகாப்பு பொறியியலாளர் ரொஷான் சந்ரகுப்தா கூறியுள்ளார்.

பேஸ்புக் பாவனையாளர்கள் தமது இணைய பாதுகாப்பினை உறுதி செய்வதில் அதிக முன்னெச்செரிக்கையுடன் இருக்க வேண்டும் எனவும் அவர் கூறினார். நண்பர்கள் பட்டியலில் இருப்பவர்கள் பார்க்கும் வகையில் மட்டும் பேஸ்புக் பாவனையாளர்கள் தமது படங்களை வெளியிட வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.

தமக்கு தெரிந்தவர்களை மட்டுமே பேஸ்புக் பாவனையாளர்கள் நண்பர்களாக இணைத்துக் கொள்ள வேண்டும் எனவும், தெரியாதவர்களை நண்பர்களாக சேர்த்துக் கொள்ளக் கூடாது என்றும் சந்ரகுப்தா மேலம் கூறியுள்ளார்.

2016ஆம் ஆண்டில் மட்டும் போலி பேஸ்புக் கணக்குகள் தொடர்பில் 2200 முறைப்பாடுகள் கிடைத்திருந்தன என்றும் அவர் தெரிவித்தார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்