கிண்ணியா கல்வி வலயத்திலுள்ள 66 பாடசாலைக்கு பூட்டு

🕔 March 15, 2017

கிண்ணியா கல்வி வலயத்திலுள்ள அனைத்துப் பாடசாலைகளும், இன்று புதன்கிழமை தொடக்கம் மூன்று தினங்கள்  பூட்டப்படுமென, கிண்ணியா வலயக் கல்விப் பணிப்பாளர் ஏ.எம். அஹமட்லெப்பை தெரிவித்தார்.

இதற்கிணங்க, வலயத்திலுள்ள 66 பாடசாலைகளும்  இன்று 15 ஆம் திகதி  முதல் மூன்று தினங்களுக்கு பூட்டப்படுகிறது.

கிண்ணியாவில் டெங்குத் தாக்கத்தினால் பாடசாலை மாணவர்கள்,  ஆசிரியர்கள் உட்பட பலர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும், நேற்று செவ்வாய்கிழமை வரையிலும் கிண்ணியாவில் 12 பேர் மரணித்துள்ளனர். இதனால் பாடசாலைகளுக்கு வருகைதருவோரின் எண்ணிக்கையில் பாரிய வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.

கிழக்கு மாகாண ஆளுநர்  கிழக்கு மாகாண கல்வி   அமைச்சர் மற்றும்  செயலாளர்களுடன் கலந்தாலோசித்தே இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளது என்றும் வலயக்கல்விப் பணிப்பாளர் தெரிவித்தார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்