கிண்ணியாவில் களத்தில் இறங்கி சேவையாற்றுமாறு, சுகாதார பிரதியமைச்சருக்கு மு.கா. தலைவர் பணிப்புரை

🕔 March 15, 2017

பிறவ்ஸ் முகம்மட் –

கிண்­ணி­யாவில் தீவி­ர­மாக பர­வும் டெங்கு நோயினால் பாதிக்­கப்­பட்­ட­வர்­க­ளுக்கு களத்தில் இறங்கி சேவையாற்­று­மாறு சுகா­தார பிரதி அமைச்சர் பைசால் காசீம், கிழக்கு மாகாண சகாதார அமைச்சர் ஏ.எல்.எம். நஸீர், கிழக்கு மாகாணசபை உறுப்­பி­னர்­க­ளான ஆர்.எம். அன்வர் மற்றும் ஜே.எம். லாஹிர் ஆகி­யோ­ருக்கு அமை­ச்சர் ரவூப் ஹக்கீம் செவ்­வாய்க்­கிழமை பணிப்­புரை விடுத்­தார்.

பாதிக்­கப்­பட்ட மக்­க­ளுக்கு உட­னடி மருத்­துவ உத­வி­களை வழங்­குதல், மக்­க­ளுக்­கு­ரிய அத்­தி­ய­வ­சியப் பொரு­ட்­களை வழங்­குதல், டெங்கு நுளம்பு பர­வு­­வதை கட்டுப்படுத்தல் போன்ற விட­யங்­களில் கட்சி பேத­மின்றி அனைவரும் ஈடு­ப­டு­மாறு அமைச்சர் ஹக்கீம் வேண்­டு­கோள் விடுத்­துள்ளார்.

அத்­துடன் பாதிக்­கப்­பட்ட மக்­க­ளுக்கு உட­ன­டி­ உத­வி­களை வழங்­கு­மாறு கிழக்கு மாகாண முத­ல­மைச்சர் நஸீர் அஹ­மதுவுக்­கும் அறி­வித்­துள்­ளார். டெங்கு நோயினால் மர­ணித்த குடும்­பங்­களின் உற­வி­னர்­க­ளுக்கு அமைச்சர் ஆழ்ந்த அனு­தா­பங்­களையும் தெரி­வித்துள்­ளார்.

இதே­வேளை, சவூதி அரே­பி­யா­வி­லி­ருக்கும் நாடா­ளு­மன்ற உறுப்­பினர் எம்.எஸ். தௌபீக், சுகா­தார பிரதியமை­ச்சர் பைசால் காசீ­முக்­கு கிண்­ணி­யாவில் வேக­மாக பரவி­வ­ரும் டெங்கு நோயை கட்­டுப்­பாட்டுக்குள் கொண்­டு­வ­ர அனைத்து முயற்சிகளையும் மேற்­கொள்­ளு­மாறு கேட்­டுள்­ளார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்