காணாமல் போயிருந்த கல்முனை மீனவர்கள் அனைவரும், மாலைதீவில் பத்திரமாக மீட்பு

🕔 January 12, 2017

Fisher men - 011– அகமட் எஸ். முகைடீன், ஹாசிப் யாசீன் –

டலுக்குச் சென்ற நிலையில் காாணாமல் போயிருந்த அனைத்து மீனவர்களும் மீட்கப்பட்டுள்ளதாக விளையாட்டுத்துறை பிரதி அமைச்சர் எச்.எம்.எம். ஹரீஸ் மாலைதீவிலிருந்து ஊர்ஜிதப்படுத்தியுள்ளார்.

காணாமல் போன 06 மீனவர்களில் இருவர் கடந்த 04ஆம் திகதி மாலைதீவில் காப்பாற்றப்பட்டனர். இந்த நிலையில், ஏனைய நான்கு பேரையும் தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டிருந்தது.

இந்த நிலையிலேயே, அவர்கள் நால்வரும், மாலைதீவு கடலோரப் பாதுகாப்பு பிரிவினரால் இன்று வியாழக்கிழமை அதிகாலை மாலைதீவு வடக்கு கடற்பிரதேசத்திலிருந்து மீட்கப்பட்டுள்ளனர்.

காணாமல் போயிருந்த மீனவர்களை மீட்கும் நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக, முஸ்லிம்காங்கிரஸ் பிரதித் தலைவரும் விளையாட்டுத்துறை பிரதி அமைச்சருமான சட்டத்தரணி எச்.ம்.எம். ஹரீஸ் மாலைதீவு சென்றிருந்தார். மேலும், அந்நாட்டு உப ஜனாதிபதி அப்துல் ஜிஹாத் மற்றும் அந்நாட்டு பாதுகாப்பு அமைச்சர் ஆதம் சரீப் ஆகியோருடன் கலந்துரையாடி ஏனைய நான்கு மீனவர்களையும் தேடும் பணியினை துரிதப்படுத்தியிருந்தார்.

இதனையடுத்து மாலைதீவு கடலோர பாதுகாப்பு படையினர், குறித்த நான்கு மீனவர்களையும், மாலைதீவின் வடக்கு பிரதேச கடற்பரப்பில் வைத்து மீட்டு, பாதுகாப்பாக கரைக்கு கொண்டுவந்தனர்.

தற்போது இம்மீனவர்கள் மாலைதீவு பாதுகாப்பு படையினரின் பாதுகாப்பில் இருப்பதை, அந்நாட்டு அரச அதிகாரிகள் மற்றும் பாதுகாப்பு படை அதிகாரிகள் விளையாட்டுத்துறை பிரதி அமைச்சரை தொடர்பு கொண்டு உறுதிப்படுத்தியுள்ளனர்.

மேலும் இம்மீனவர்களை விரைவில் இலங்கைக்கு அழைத்துவருவது சம்பந்தமான ஏற்பாடுகள் நடைபெறுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்