விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ள விமலுக்கு, வீட்டுச் சாப்பாடு

🕔 January 12, 2017

Wimal - 074விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ள தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவன்சவுக்கு, வீட்டிலிருந்து உணவு கொண்டுவரப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

சிறைச்சாலை அதிகாரிகளிடம் விமல் வீரவன்ச விடுத்த வேண்டுகோளுக்கு இணங்க, வீட்டிலிருந்து உணவினைப் பெற்றுக் கொள்வதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இதற்கிணங்க, மூன்று வேளை உணவினையும் வீட்டிலிருந்து  விமல் வீரவன்ச பெற்றுக் கொள்வதாக அறிய முடிகிறது.

இது குறித்து சிலைச்சாலைத் தரப்பினர் தெரிவிக்கையில்; “குறைந்தளவான உணவு சிறைச்சாலையில் வழங்கப்படும். அதேவேளை, எந்தவொரு கைதியும் வெளியிலிருந்து உணவினைப் பெற்றுக் கொள்வதற்கான வசதியும் உள்ளது” என்கின்றனர்.

இதன்படிதான், வெளியிலிருந்து உணவினைப் பெற்றுக் கொள்வதற்கான அனுமதி, விமல் வீரவன்சவுக்கு வழங்கப்பட்டுள்ளது எனவும், சிறைச்சாலைத் தரப்பினர் கூறுகின்றனர்.

நேற்று முன்தினம் செவ்வாய்கிழமை, நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்ட விமல் வீரவன்சவை, 24ஆம் திகதிவரை விளக்க மறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த ஆட்சிக் காலத்தின் போது 40 அரச வாகனங்களை சட்டத்துக்கு முரணாகப் பயன்படுத்தியமை காரணமாக, அரசுக்கு 90 மில்லியன் ரூபா நஷ்டத்தினை ஏற்படுத்தினார் எனும் குற்றச்சாட்டில் இவர் கைது செய்யப்பட்டார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்