அமைச்சர் நஸீரின் நிதியொதுக்கீட்டில், வாழ்வாதார உபகரணங்கள் வழங்கி வைப்பு

🕔 January 8, 2017
naseer-0111– சப்னி அஹமட் –

ட்டாளைச்சேனை பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் வாழும் வறிய குடும்பங்களுக்கு உதவும் நோக்கில், அவர்களுக்கான வாழ்வாதார உபகரணங்கள் வழங்கி வைக்கும் நிகழ்வு இன்று ஞாயிற்றுக்கிழமை ஒலுவிலில் இடம்பெற்றது.

கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல்.எம். நஸீரின் பன்முகப்கப்படுத்தப்பட்ட நிதியிலிருந்து அட்டாளைச்சேனை, ஒலுவில் பிரதேசங்களில் பதிவு செய்யப்பட்ட அமைப்புக்களினூடாக இந்த உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டன.

அமைச்சரின் மக்கள் தொடர்பு அதிகாரி எம்.ஐ.எம். நயீம் தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்வில், ஒலுவில் மின்ஹா மாதர் சங்கத்தின் அங்கத்தவர்கள் 184 போருக்கு வாழ்வாதார உபகரணங்களும், ஒலுவில் மற்றும் அட்டாளைச்சேனை முச்சக்கர வண்டி உரிமையாளர்கள் 110 பேருக்கு டயர்களும் , 176 பேருக்கு விவசாய உபகரணங்களும் மற்றும் அட்டாளைச்சேனையைச் சேர்ந்த மீனவர்கள் 65 பேருக்கு மீன்பிடி உபகரணங்களும் வழங்கப்பட்டன.

இந் நிகழ்வில் சுகாதார அமைச்சர் ஏ.எல்.எம். நஸீர் கலந்து கொண்டு, வாழ்வாதார உபகரணங்களை வழங்கி வைத்தார்.

இதன் போது அட்டாளைச்சேனை பிரதேச செயலாளர் ஐ.எம்.  ஹனீபா, அட்டாளைச்சேனை பிரதேச சபையின் முன்னார் பிரதி தவிசாளர் ஏ.ல். நபீல் மற்றுமு்ட அமைச்சரின் பிரயேத்தியேக செயலாளர் யு.எல். வாஹிட் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.naseer-0222

Comments

புதிது பேஸ்புக் பக்கம்