அமைச்சர் றிசாத் கலந்து கொள்ளும் நேரடி நிகழ்ச்சி; இன்றிரவு தெரண தொலைக்காட்சியில்
அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தலைவரும், அமைச்சருமான றிசாத் பதியுத்தீன், இன்று திங்கட்கிழமை இரவு ‘தெரண’ தொலைக்காட்சியில் இடம்பெறும் நேரடி அரசியல் கலந்துரையாடல் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவுள்ளார்.
இதன்போது சர்ச்சைக்குரிய பல்வேறு விடயங்கள் தொடர்பில், அவர் பதிலளிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
குறிப்பாக, வில்பத்து விவகாரம் மற்றும் காடுகளை அழித்து அங்கு முஸ்லிம்கள் மீள்குடியேறுகின்றனர் போன்ற பல்வேறு குற்றச்சாட்டுகளுக்கு அவர் பதிலளிப்பார் என்று கூறப்படுகிறது.
ஏற்கனவே, ‘ஹிரு’ தொலைக்காட்சியில் இடம்பெறும் ‘பலய’ எனும் அரசியல் கலந்துரையாடல் நேரடி நிகழ்ச்சியில், அமைச்சர் றிசாத் பதியுத்தீன் கலந்து கொண்டமை குறிப்பிபடத்தக்கது. இதில் பௌத்த தேரர் ஒருவருடன் விவாதித்து, வில்பத்து விவகாரம் தொடர்பில் தன்மீதும், முஸ்லிம் மக்கள் மீதும் முன்வைக்கப்பட்டு வந்த குற்றச்சாட்டுக்களுக்கு, அமைச்சர் உரிய ஆவணங்களை வெளிப்படுத்தி பதிலளித்திருந்தார்.
இவ்வாறானதொரு நிலையிலேயே, இன்று இரவு 10.30 மணிக்கு தெரண தொலைக்காட்சியின் 360 எனும் நிகழ்வில், அமைச்சர் பங்கேற்கிறார்.