காத்தான்குடி பொலிஸாரின் நோன்பு துறக்கும் நிகழ்வு

🕔 June 29, 2015
Ifthar - kky police - 04– பழுலுல்லாஹ் பர்ஹான் –

ன நல்லுறவு பேணும் வகையிலான நோன்பு துறக்கும் நிகழ்வொன்று, காத்தான்குடி பொலிஸ் நிலையத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றது.

காத்தான்குடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஆரியபந்து வெதகெதர தலைமையில் இந் நிகழ்வு இடம்பெற்றது.

மட்டக்களப்பு மாவட்ட பொலிஸ் அத்தியட்சகர் உபாலி ஜெயசிங்க ,காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்கள் சம்மேளனத்தின் தலைவர் றவூப் ஏ மஜீட் ,மட்டக்களப்பு பிராந்தியம் – 01 க்கான உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் அனுருந்த பண்டார ஹக்மன,மட்டக்களப்பு பிராந்தியம் – 02 க்கான உதவிப் பொலிஸ் அத்தியட்கர் தசநாயக்க உட்பட பொலிஸ் நிலையங்களின் பொறுப்பதிகாரிகள் உட்பட –  ஊர் பிரமுகர்கள், புத்தஜீவிகள், கல்வியலாளர்கள், வர்த்தகப் பிரமுகர்கள், பொலிஸ் உத்தியோகத்தர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

இங்கு தமிழ் மொழியில் மார்க்க சொற்பொழிவை காத்தான்குடி ஜமாலிய்யா அறபுக் கல்லூரியின் அதிபர் மௌலவி அல்-ஹாபிழ் றமீஸ் ஜமாலியும் ,சிங்கள மொழியில் மார்க்க சொற்பொழிவை மட்டக்களப்பு பல்கலைக்கழக கல்லூரியின் மாணவர் மௌலவி ஸாமிலும் நிகழ்த்தினர்.Ifthar - kky police - 02Ifthar - kky police - 03Ifthar - kky police - 01

Comments

புதிது பேஸ்புக் பக்கம்