அறபாவின் ஆளுமைகள்: அதிபர் அன்சார் தலைமையில் நிகழ்வு

🕔 November 10, 2016

 arafa-011
– றிசாத் ஏ காதர் –

ட்டாளைச்சேனை அறபா வித்தியாலயத்தில் இவ்வருடம் ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களையும், கற்பித்த ஆசிரியர்களையும் பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வு, வித்தியாலய திறந்த வெளியரங்கில் இன்று வியாழக்கிழமை நடைபெற்றது.

இந்நிகழ்வானது ‘அறபாவின் ஆளுமைகள்’ எனும் மகுடத்தில், பாடசாலை அதிபர் எம்.ஏ. அன்சார் தலைமையில் இடம்பெற்றது.

கிழக்கு மாகாண சுகாதார சுதேச மருத்துவ அமைச்சர் கௌரவ ஏ.எல்.எம் நசீர், கிழக்கு மாகாண முன்னாள் அமைச்சரும் தற்போதைய எதிர்க்கட்சித் தலைவருமான எம்.எஸ். உதுமாலெவ்வை, வலயக்கல்விப் பணிப்பாளர் ஏ.எல்.எம். காசீம், கோட்டக்கல்விப் பணிப்பாளர் எம்.ஏ.சி. கஸ்ஸாலி, உதவிக் கல்விப் பணிப்பாளர் அபுதாஹீர் மற்றும் அட்டாளைச்சேனை ஆயுர்வேத ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் டொக்டர் கே.எல்.எம். நக்பர் உள்ளிட்டோர் இந் நிகழ்வில் அதிதிகளாகக் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்வில் இணைப்பாடவிதான செயற்பாடுகளில் மாகாண மற்றும் மாவட்ட மட்டங்களில் திறமைகளை வெளிப்படுத்திய மாணவர்களும், பாடசாலையின் செயற்பாடுகளில் அதிக ஆர்வம் காட்டிய மாணவர்களும் பாராட்டி, கௌரவிக்கப்பட்டனர்.arafa-033 arafa-044 arafa-022

Comments

புதிது பேஸ்புக் பக்கம்