மைத்திரியின் பகலுணவு; ஆச்சரியப்படுத்தும் மனிதர்

🕔 November 10, 2016

maithiri-lunch-011னாதிபதி மைத்திரிபால சிறிசேன, அவரின் நடத்தைகள் காரணமாக மிகவும் எளிமையானர் என்ற நன்மதிப்பை பெற்றுள்ளமை பற்றி அறிவோம்.

அந்தவகையில், அதனை நிரூபிக்கும் வகையில் இன்று வியாழக்கிழமை சம்பவமொன்று இடம்பெற்றது.

வரவு செலவுத்திட்டம் தொடர்பான சிறப்பு அமர்வு இன்று நாடாளுமன்றில் ஆரம்பமானது. இதன்போது ஜனாதிபதியும் அங்கு வருகை தந்திருந்தார்.

நாடாளுமன்ற வளாகத்திற்குள் ஐந்து நட்சத்திர ஹோட்டல்களில் தயாரிக்கப்படும் உணவுகளை வழங்கும் சிற்றூண்டிசாலை அமைக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்ற அமர்வில் கலந்து கொள்ளும் அனைவரும் அங்கு உணவருந்துவது வழமையாகும்.

ஆனாலும், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, இன்றைய தினம் தனக்கான மதிய உணவை வீட்டிலிருந்து கொண்டு, நாடாளுமன்ற அமர்வுக்கு முன்னர் எளிமையான முறையில் உணவருத்தியதாக தெரிவிக்கப்படுகிறது.

அதன்போது எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்றினை காணலாம்.

Comments