நுரைச்சோலை மின் உற்பத்தி, முழுமையான செயற்பாட்டுக்கு வருகிறது: அமைச்சர் சியம்பலாபிட்டிய

🕔 October 29, 2016


ranjith-siyampalapittiya-005நு
ரைச்சோலை அனல் மின் உற்பத்தி நிலையத்தின் முழுமையான நடவடிக்கைகளும்  நாளை மறுதினம் நவம்பர் மாதம் 01ம் திகதி முதல் செயற்பாட்டுக்கு வரும் என்று, மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்..

இதற்கிணங்க அனைத்து மின் பிறப்பாக்கி இயந்திரங்களினதும், மின் உற்பத்தி செய்யும் நடவடிக்கைகள்  01ஆம் திகதி முதல் செயற்பாட்டுக்கு வரவுள்ளதாக அவர் கூறினார்.

அண்மையில் ஏற்பட்ட கோளாறு காரணமாக, நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையத்தின் நடவடிக்கைகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன.

தற்சமயம் இரண்டு மின் பிறப்பாக்கி இயந்திரங்களின் மூலம், மின் உற்பத்தி நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும், ஏனைய மின் பிறப்பாக்கி இயந்திரங்களின் மூலமான மின் உற்பத்தி எதிர்வரும் நவம்பர் மாதம் 01ம் திகதி ஆரம்பிக்கப்படும் என்றும் அமைச்சர் கூறியுள்ளார்.

இதேவேளை வாடிக்கையாளர்களுக்கு மின்சார சபை நட்டஈடு வழங்கும் முறைமை ஒன்றினை, அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் அறிமுகப்படுத்தவுள்ளதாகவும் அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்